
பாக்கியலட்சுமி சீரியலிருந்து விலகுவது குறித்து தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் மிகப்பெரிய பில்லராக விளங்கி வருபவர் சதீஷ்.

கோபி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார் என்று சொல்வதை விட வாழ்ந்து வருகிறார் என ரசிகர்கள் பலரும் பாராட்டு வருகின்றனர். இந்த நிலையில் நீ வேதனைப்பட்ட காரணங்களினால் இந்த சீரியலில் இருந்து விலகுவது உறுதியான கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தனிப்பட்ட சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தேன். ஆனால் அந்த பிரச்சனைகள் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டன. என்னுடைய கேள்விகளுக்கு பதில் கிடைத்து விட்டது அதனால் முழு மனதோடு தொடர்ந்து இந்த சீரியலில் நடிக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இதனால் கோபியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.