ராதிகாவை திருமணம் செய்து கொள்ளப் போவது எப்போது என கோபியை நச்சரிக்க தொடங்கியுள்ளார் ராதிகாவின் அம்மா.

Baakiyalakshmi Serial Episode Update 22.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபி வீட்டுக்கு போன ராதிகாவை ராதிகா வாழ்க கோபி என உள்ளே அழைக்கிறார். பிறகு என் பிரண்டு உன்கிட்ட பேசினானா என கேட்கிறார். சொன்னாரு ஏதோ சண்டை மிஸ் அண்டர்ஸ்டாண்ட் ஆகிடுச்சு என அதெல்லாம் விடுங்க பிரச்சனை இல்லை என கூறுகிறார். உன்னோட ஆபிசுக்கு போயிட்டு பேச சொல்லி இருக்கேன் என கூறுகிறார்.

ராதிகாவுடன் திருமணம் எப்போது? நச்சரிக்க தொடங்கிய ராதிகாவின் அம்மா.. பாக்யாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி கொண்டே முழு எபிசோட் அப்டேட்

அதன்பிறகு இன்னைக்கு டாக்டர்கிட்ட போகணும்ல வா போகலாம் என சொல்ல நாளைக்கு போகலாமா டயர்டா இருக்கு என கூறுகிறார் ராதிகா. டாக்டர் கிட்ட எல்லாம் கரெக்டா போகணும் என கூறுகிறார். அப்பாய்ன்மெண்ட் வாங்கணும் ராதிகா சொல்ல அதெல்லாம் நான் வாங்கிட்டேன் என சொல்கிறார். ஹாஸ்பிடலுக்கு கூட்டிச் செல்வதற்காக ராதிகாவை கோபி தூக்க அந்த நேரத்தில் ராதிகாவின் அம்மா வருகிறார்.

நானும் ஹாஸ்பிடலுக்கு தான் கிளம்பிட்டு இருந்தேன் என சொல்ல சரி வாங்க எல்லாரும் போய்ட்டு வரலாம் என கூறுகிறார் கோபி. நீங்க போகிறதா இருந்தா நான் வரல என ராதிகாவின் அம்மா சொல்ல சரி நாங்க போயிட்டு வரோம் என கோபி கூறுகிறார். அதுக்கு முன்னாடி உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் உட்காருங்க என கூறுகிறார். உங்க அப்பா வந்து அவ்வளவு பிரச்சனை பண்ண பிறக்கும் உங்கள வீட்டுக்குள்ள விட்டதற்கு ஒரே காரணம்தான் இருக்கு. நீங்க ராதிகாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னீங்க. கோபி ஆமாம் நான் சொன்னேன் கண்டிப்பா ராதிகாவை கல்யாணம் பண்ணிப்பேன் என கூறுகிறார். அது தான் எப்போ என கேட்கிறார். ராதிகாவை கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா இந்த வீட்டுக்கு வாங்க இல்லனா வராதீங்க என்று கூறிவிடுகிறார். கல்யாணமான ஆம்பளைங்க கூட நான் என் பொண்ணு பேசுறது எனக்கு பிடிக்கல என சொல்லி விடுகிறார். பிறகு ராதிகா அம்மாவுடன் ரூமிற்குள் செல்கிறார்.

இந்த பக்கம் பாக்யாவின் மாமனாரும் மாமியாரும் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் எழில் வருகிறார். அவர் பாக்கியா பற்றி கேட்க அவருடைய பாட்டி பிரச்சனை குறித்து சொல்கிறார். உங்கப்பா அந்த கம்பெனியை இழுத்து மூடிவிட சொன்னாரு என சொல்கிறார். உடனே எழில் அம்மாவை பார்த்துட்டு வரேன் என கிளம்பிவிடுகிறார்.

ராதிகாவுடன் திருமணம் எப்போது? நச்சரிக்க தொடங்கிய ராதிகாவின் அம்மா.. பாக்யாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி கொண்டே முழு எபிசோட் அப்டேட்

அதற்குள் பாக்கியா வாடகைக்கு எடுத்திருக்கும் வீட்டிற்கு பக்கத்தில் உள்ளவர்கள் போலீசை கூட்டி வருகின்றனர். போலீஸ் வந்து அவர்களிடம் இங்க ஹோட்டல், மெஸ் எல்லாம் நடத்தக்கூடாது என கூறுகின்றனர். பிறகு பாக்கியா போலீசாரிடம் தங்களுடைய நிலைமையை எடுத்துச் சொல்லி அவர்களுக்கு புரிய வைக்கிறார். இங்க யாரும் வரமாட்டாங்க யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது. இது ஹோட்டலும் இல்ல மெஸ்ஸூம் இல்ல மசாலா அரைக்கிற இடம். நாங்க இந்த வேலையை நம்பி தான் இருக்கிறோம் என சொல்லி புரிய வைக்கிறார். ஒரு மாதம் பாருங்க உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் சொல்லுங்க நாங்க காலி பண்ணி விடுகிறோம் என சொல்கிறார். போலீசாரும் பாக்கியா சொல்வதைக் கேட்டுக்கொண்டு நீங்க இங்க வேலை பார்க்கலாம் என கூறி விட்டு சென்று விடுகின்றனர். பிறகு இயல்பாகவே கட்டிப்பிடித்து சூப்பர் எனப் பாராட்டுகிறார்.

அப்படியே இந்த பக்கம் அமிர்தாவின் அம்மா மூட்டு வலி மருந்து வாங்கி வரும் அது அவருடைய கணவரிடம் சொல்லி அனுப்ப அவர் எங்கேயும் இல்லை என சொல்கிறார். பிறகு எழிலிடம் சொல்லுங்கள் என சொல்ல அமிர்தா நான் வாங்கிட்டு வரேன் அவர் கிட்ட சொல்லாதீங்க என கூறுகிறார். உனக்கும் எனக்கும் என்ன பிரச்சனை என அமிர்தாவின் அம்மா கேட்க அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை என சொல்லி விட்டு உள்ளே சென்று விடுகிறார். நீங்க எழிலை வர சொல்லுங்க அவன் கிட்ட பேசலாம். அப்படியே மருந்து வாங்கிட்டு வர சொல்லுங்க என கூறுகிறார்.

அவர் சொன்னது போல எழிலும் மருந்து வாங்கிட்டு வந்து கொடுக்கிறார். பிறகு அமிர்தாவின் அம்மா உனக்கும் அவருக்கும் என்ன பிரச்சனை என கேட்கிறார். எங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை அதெல்லாம் ஒன்றும் இல்லை என எழில் கூறுகிறார். அப்படியே அமிர்தாவிடம் நமக்குள்ள என்னங்க பிரச்சனை என கேட்க அவர் அமைதியாக உள்ளே எழுந்து சென்று விடுகிறார். இதனால் வீட்டில் உள்ளவர்கள் திரும்பவும் கேட்க என்ன பதில் சொல்வது என தெரியாமல் நிற்கிறார் எழில். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடு முடிவடைகிறது.