ராதிகா வீட்டில் தீபாவளி கொண்டாட சென்ற கோபிக்கு பாக்கியாவிடம் இருந்து வந்த ஃபோன் காலால் அவர் சிக்க இருந்தார்.

Baakiyalakshmi Serial Episode Update 30.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஜெனி வீட்டிலிருந்து அவருடைய பெற்றோர் வந்திருக்க ஈஸ்வரி கோபமாக இருந்ததால் எல்லாத்தையும் அத்தை தான் சொல்லிக் கொடுத்தாங்க என பாக்கியா ஐஸ் வைத்து அவரை அனைவரிடமும் பேச வைத்தார். பிறகு அனைவரும் மகிழ்ச்சியாக பேசிவிட்டு ஜெனி வீட்டார் கிளம்பினர்.

மத்திய அரசு பயப்படுகிறது : ராகுல்  விமர்சனம்

ராதிகா வீட்டில் தீபாவளி கொண்டாடும் கோபி.. பாக்கியாவிடமிருந்து வந்த ஃபோன் கால், அடுத்து நடந்தது என்ன? பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்தப் பக்கம் கோபி ராதிகா வீட்டில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் மய்யூ ஸ்வீட் சாப்பிடுங்க என எடுத்து வந்து கொடுக்கிறார். ‌ இல்ல அங்கிள் நிறைய சாப்பிட்டு விட்டேன் போதும் என கூறுகிறார். பிறகு பாக்கியாவிடமிருந்து கோபிக்கு தொடர்ந்து போன் வருகிறது. கோபி ஆபீஸ் கால் என அதனை கட் செய்து விடுகிறார். பிறகு மய்யூ நான் எடுத்து பேசுகிறேன் நீங்கள் பிசியாக இருக்கீங்கன்னு சொல்கிறேன் என கூறி போனை வாங்குகிறார். கோபி இல்லடா நானே பேசுகிறேன் என போனை எடுத்து யாரோ ஒருவரிடம் பேசுவதுபோல பேசுகிறார்.

பாக்கியா வீட்டில் எல்லோரும் வந்து இருக்காங்க நீங்க எப்ப வரீங்க என கேட்க நான் கொஞ்சம் வேலையா இருக்கேன். முக்கியமானவர்களுடன் பேசிட்டு இருக்கேன் என கூறி போனை வைத்து விடுகிறார். இவர் ஏன் இப்படி பண்றாருனு தெரியலியே பேசிட்டு இருக்கும் போதே போனை கட் செய்கிறார் என புலம்பிக் கொண்டிருக்கிறார்.

Ajith ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise – Dhruv Vikram அடுத்த படம் இவருடனா? | Latest Cinema News

ராதிகா வீட்டில் தீபாவளி கொண்டாடும் கோபி.. பாக்கியாவிடமிருந்து வந்த ஃபோன் கால், அடுத்து நடந்தது என்ன? பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு வீட்டில் உள்ள எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க ஏழில் வந்து அமிர்தா வீட்டிலிருந்து எல்லோரும் வந்திருக்கிறார்கள் என கூறுகிறார். பிறகு அமிர்தா கையில் குழந்தையுடன் வந்து இருப்பதை பார்த்து அனைவரும் ஷாக் ஆகினர். மேலும் இது யார் குழந்தை என கேட்க அமுதாவின் குழந்தைதான் என எழில் சொன்னதும் அனைவருக்கும் இன்னும் அதிர்ச்சி.

பிறகு எல்லோரும் மாறி மாறி குழந்தையைக் கொஞ்ச பாக்கியாவும் ஈஸ்வரி பற்றியும் குழந்தையோடு போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். எழில் மட்டும் இல்லன எங்களுக்கு இந்த தீபாவளியை இல்லை என அமிர்தாவின் அப்பா கூறுகிறார். எழில் தான் எங்களுக்கு டிரஸ் எல்லாம் எடுத்து கொடுத்து போனவங்க போய்ட்டாங்க நமக்காக தீபாவளி கொண்டாடலாம் என கூறுகிறார். அமிர்தாவும் எழில் இல்லைன்னா நாங்க வீட்டுல மூலையில உக்காந்திட்டு இருப்போம் என சொல்ல இதற்கு மூல காரணம் நாங்க இருக்கோம்ல வந்து சந்தோஷமா இருங்க என பாக்கியா கூறுகிறார். பிறகு அமிர்தாவின் அப்பா எழில் பற்றி புகழ்ந்து கூறுகிறார்.

இனியா அண்ணனோட சின்ன வயசு போட்டோக்களை காட்டுவதாக கூறி அமிர்தாவை ரூமிற்கு அழைத்துச் செல்கிறார். எழில் பதறிப்போய் லட்டு அதெல்லாம் வேண்டாம் என பின்னாடியே ஓடுகிறார். இந்த நேரத்தில் எழிலின் நண்பர் சதீஷ் வீட்டிற்கு வருகிறார். அவர் குடும்பத்தாருடன் பேசிக்கொண்டிருக்க இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் அப்டேட்.