கோபியை விவாகரத்து செய்து விட்டு வரச் சொல்கிறார் ராதிகாவின் அம்மா.

Baakiyalakshmi Serial Episode Update 29.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கடந்த எபிசோடில் கோபி ஆபிஸில் வேலை செய்யும் சதீஷ்க்கு போன் செய்து வீட்டிற்கு வந்து ஆபீஸில் எனக்கு வேலை இருக்கு என என்னை கூட்டிட்டு போ என கூறினார். பிறகு வைத்துவிட்டு எதுவும் நடக்காததுபோல போய் சாப்பிட்டுவிட்டு சதீஷை எதிர்பார்த்துக் கொண்டு பூனைப்போல இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தார். அவருடைய அம்மா என்ன கோபி என கேட்க நான் கொஞ்சம் நிறைய சாப்பிட்டேன் வயிறு ஃபுல்லா இருக்கு என கூறுகிறார். வீட்டு சாப்பாடு தானே அதெல்லாம் ஒன்னும் ஆகாது என கூறுகிறார்.

சிந்துவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் : ஆறுதலாய் தேற்றுகின்றனர், எனர்ஜி நெட்டிசன்கள்..

கோபியை விவாகரத்து செய்து விட்டு வரச் சொல்லும் ராதிகாவின் அம்மா.. வெறுப்பை காட்டும் ஈஸ்வரி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு கோபி வந்து சோபாவில் அமர பிறகு பாக்கியா அங்கு வந்ததும் அவரது கையில் அடிபட்டது பற்றி விசாரிக்கிறார். உடனே பாக்கியா பூரித்துப் போகிறார். இந்த நேரத்தில் சரியாக சதீஷ் வர அவரை உள்ளே அழைக்கிறார் கோபி. உள்ளே வந்த சதீஷ் சார் உங்களுக்கு ஆபிசில் கொஞ்சம் வேலை இருக்கு என அழைக்கிறார். இன்னைக்கு கூட என்ன வேலை புடலங்காய் வேலை என கோபியின் அப்பா கூற பாங்குக்கும் ஆபீசுக்கும் ஒரு சின்ன பிரச்சனை வர மாதிரி இருக்கு. ஸ்டாப் மூணு பேர் வந்துருக்காங்க. சாருக்கு தான் அதை பற்றிய விஷயம் தெரியும் அவர் வந்தால் பிரச்சனையை முடித்து விடலாம். நாளைக்கு பேங்க்குக்கு போய் பேச ஈசியாக இருக்கும் என கூறுகிறார். உடனே கோபி தீபாவளி பெஸ்டிவல் செளிப்ரேஷன்ல மறந்தே போயிட்டேன். எனக்காக ஸ்டாப்ஸ் வெயிட் பண்ணிட்டு இருக்காங்களா. இந்த ஒரே நிமிஷம் என சாவியை எடுத்துக்கொண்டு ஆபீசுக்கு கிளம்பி விடுகிறார்.

இந்தப் பக்கம் ராதிகாவும் அவருடைய மகளும் கோபி எடுத்துக்கொண்ட உடைகளை அணிந்து தீபாவளி கொண்டாட தயாராகிக் கொண்டிருக்க கோபி வருகிறார். மய்யூ நீங்க வர மாட்டீங்க னு நினைச்சேன் என சொல்ல நான் தான் ப்ராமிஸ் பண்ணிட்டு போனேனே அப்புறம் எப்படி வராமல் இருப்பேன் என கூறுகிறார். பிறகு அனைவரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். பிறகு கோபியை சாப்பிட்டீங்களா இல்லை கேட்க உங்க கூட சாப்பிடனும்னு தான் வந்தேன் என சொல்கிறார். ஏற்கனவே வயிறு ஃபுல்லா சாப்பிடு கோபி ராதிகா வீட்டில் சாப்பிட முடியாமல் முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு சாப்பிடுகிறார்.

பிரபல Dance Master திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள் | Siva Shankar Master Passed Away | RIP

கோபியை விவாகரத்து செய்து விட்டு வரச் சொல்லும் ராதிகாவின் அம்மா.. வெறுப்பை காட்டும் ஈஸ்வரி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

சாப்பிட்டு முடித்த பிறகு ராதிகாவிடம் அவருடைய அம்மா எல்லாம் சரிதான் ஆனால் இந்த ரிலேஷன்ஷிப் தான் என்ன பெயர்னு தெரியல. முதல்ல அவரை விவாகரத்து செய்து விட்டு வர சொல்லு என கூறுகிறார். முதல்ல எனக்கு விவாகரத்து கிடைக்கட்டும் அப்புறம் பார்த்துக்கலாம் என ராதிகா கூறுகிறார்.

இந்த பக்கம் செல்வி பாக்கியா வீட்டிற்கு வர அனைவரும் ஒன்றாக பேசிவிட்டு போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். அதன்பிறகு எழில் அமிர்தாவையும் அவர்களது அப்பா அம்மாவையும் கூப்பிட்டு வரவா என கேட்கிறார். பாக்கியாவும் கூப்பிட்டுட்டு வா என்று சொல்கிறார். மேலும் இன்னொரு ஸ்பெஷல் கெஸ்ட் வராங்க என சொல்ல பாக்கியா யாருன்னு கேட்கிறார். அது சர்ப்ரைஸ் வந்தது பார்ப்போம் என கூறிவிட்டு எழில் கிளம்புகிறார்.

பிறகு செழியன் மற்றும் ஜெனி ஆகியோர் மத்தாப்பு கொளுத்திக் கொண்டிருக்க அவர்களது பெற்றோர் வருகின்றனர். அதன்பிறகு அவர்கள் பாக்கியம் செய்த பலகாரங்களை சாப்பிட்டு விட்டு சூப்பராக இருப்பதாக கூறுகின்றனர். செழியன் ஜெனியின் அம்மா அப்பாவிடம் மன்னிப்பு கேட்கிறார். அதன்பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கோபியின் அப்பா என்னடி இராக்கம்மா என்ற பாடலைப் பாட ஈஸ்வரி கோபப்படுகிறார். பாக்கியா ஸ்வீட் எல்லாம் நல்லா இருந்ததுன்னு சொன்னாங்க என அவரது அத்தையிடம் சொல்ல அதுக்கு நான் என்ன பண்ணட்டும் என கோபப்படுகிறார். உடனே பாக்கியா சுதாரித்துக்கொண்டு எல்லாம் அத்தை சொல்லி கொடுத்ததுதான். எதுக்கு எவ்வளவு போடனும் என அத்தை தான் சொன்னார்கள். அதிரசம் சாஃப்டா இருக்குன்னு சொன்னீங்களே அது கூட அத்தை சொல்லி கொடுத்தது தான் இன்று பாக்கியா கூற ஈஸ்வரி முகத்தில் சிரிப்பு வருகிறது. இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.