ராதிகாவிடம் கோபியின் அப்பா உண்மையை சொல்லப் போக கடைசியில் ஒரு ட்விஸ்ட் காத்திருந்தது.

Baakiyalakshmi Serial Episode Update 29.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபியை வெளுத்து வாங்கிய அவரது அப்பா ராதிகா வீட்டிற்கு நான் சாப்பாடு கொண்டு செல்கிறேன் என சாப்பாட்டு பையை வாங்கி கொண்டு கிளம்பினார்.

ராதிகா வீட்டுக்கு அப்பா செல்வதால் என்ன செய்வது என தெரியாமல் பதற்றத்தோடு ராதிகாவுக்கு போன் செய்கிறார். இரண்டு முறை போனை எடுக்காத ராதிகா மூன்றாவது முறை போனை எடுக்கிறார். அதற்குள் காலிங் பெல் அடிக்கிறது. கோபியிடம் டீச்சர் தான் சாப்பாடு கொண்டு வந்திருக்காங்கனு நினைக்கிறேன். நான் அப்புறம் கூப்பிடுறேன் கோபி என போனை வைத்து விடுகிறார்.

முகமது அமிர்-ஹர்பஜன் சிங் டுவிட்டரில் எல்லை தாண்டிய மோதல்..

ராதிகாவிடம் உண்மையை சொல்ல போன கோபியின் அப்பா.. கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட் - பாக்கியலட்சுமி இன்றைய சீரியல் முழு எபிசோட் அப்டேட்

கதவைத் திறந்து பார்த்தால் கோபியின் அப்பா நிற்கிறார். உள்ள வாங்கப்பா உங்கள பாத்து எவ்வளவு நாளாச்சு என உள்ளே அழைக்கிறார் ராதிகா. முகம் ஒரு வாட்டமாக இருப்பதை பார்த்த அவர் என்னப்பா ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க என கேட்கிறார். ராத்திரி சரியா தூங்கல அதுதான் என்று பட்டும் படாமல் பதில் கூறுகிறார்.

பிறகு ராதிகா பற்றி ஒவ்வொரு விஷயமாக கேட்டு அறிகிறார். அவரிடம் என்னுடைய சொந்த ஊரு குன்னக்குடியா என கேட்க இல்லப்பா அது அம்மாவோட ஊரு. எனக்கு சொந்த ஊரு திருநெல்வேலி வாசுதேவ நல்லூர் என கூறுகிறார். மேலும் உங்க அப்பா என்ன பண்றாரு எனக் கேட்க பேங்கில் வேலை பார்த்தார் என கூற அப்போது தான் இவருக்கு ராதிகா கோபியின் சிறுவயது தோழி என்பது தெரிய வருகிறது.

அதன் பிறகு நீ இனியாவோட அப்பாவை பார்த்து இருக்கியாமா என கேட்டதற்கு சிரிக்கிறார் ராதிகா. உங்க வீட்டுல எல்லாரையும் எனக்கு தெரியும் உங்க வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவர் இருக்கிறது இல்லை. நானும் டீச்சரும் குன்றக்குடியில் சந்தித்துக்கொண்ட போது கூட அவர் வந்ததா சொன்னாங்க. ஆனால் அங்கேயும் பார்க்க முடியவில்லை என கூறினர். பிறகு கோபியின் அப்பா உன்னிடம் ஒன்று சொல்லணும் எனவே தொடங்க அந்த நேரத்தில் மயூ வந்து விடுகிறார். இதனால் பேச முடியாமல் நிற்கிறார் கோபியின் அப்பா.

அஜித் படத்தையும் இப்படி தான் சொன்னாங்க! – Annaatthe Trailer Reaction

பிறகு மயூ கோபியின் அப்பாவிடம் பிக்னிக் போயிட்டு வந்தது குறித்து பேசுகிறார். சாக்லேட் கொடுத்து இனியா அக்காவிடம் கொடுக்குமாறு கூறுகிறார். கடைசிவரை ராதிகாவிடம் பேச வந்ததை கேட்க முடியாமல் அங்கிருந்து கிளம்புகிறார் கோபியின் அப்பா.

இந்தப்பக்கம் கோபி அப்பா போய் என்ன பேசினாரோ என ஒரே பதற்றத்தில் இருக்கிறார். பயந்து பயந்து மேலே இருந்து கீழே இறங்கிய அவர் இனியா பக்கத்தில் உட்காருகிறார். பாட்டி எங்கே என கேட்கிறார் பாட்டி ரூமில் இருக்கிறார்கள் கூப்பிடவா என கேட்க நோ நோ நோ என அலறுகிறார். தாத்தா எங்கே எனக் கேட்க தாத்தா வீட்டில் இல்லை என நினைக்கிறேன் என கூறுகிறார். அதன்பிறகு பாக்கியா ஆபீஸ் கிளம்பலையா என கேட்கிறார். போலாம் போலாம் என கூறுகிறார். ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க எனக் கேட்க உடம்பு சரியில்லை எனக் கூறுகிறார். உடனே நெற்றியில் கை வைத்து பார்த்து விட்டு காய்ச்சல் எதுவும் இல்லையே என சொல்கிறார்.

அப்பா எங்கே எனக் கேட்க ராதிகா வீட்டுக்கு போய் இருக்காருல, ராதிகாவுடன் பேசிட்டு இருப்பார் என பாக்கியா கூறுகிறார். உங்க இதயம் துடிக்கிறது முகத்துல தெரியுது என பாக்கியா சொல்ல டென்ஷன் டென்ஷன் அப்பா வந்தா எல்லாம் சரியா போயிடும் என கூறுகிறார். பாக்கியா இனியா என இருவரும் கோபியை பார்க்க உடனே அப்பா மகள் பார்த்தா எனக்கு ஒரு நம்பிக்கை வரும் சரியா போயிடும் என கூறுகிறார்.

பாக்கியா கோபிக்கு பிபி செக் செய்ய 150க்கு மேல் உள்ளது. பிறகு கோபி எழுந்து மேலே செல்கிறார். அவராக ஏதோ புலம்பிக்கொண்டே செல்கிறார். அம்மா எப்பயும் நீதான் தலையில் அடிபட்ட மாதிரி புலம்புவ, இன்னைக்கு அப்பா புலம்புறாரு என இனியா கூற பாக்கியா ஒரு அடி கொடுத்து விட்டு உள்ளே செல்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.