கோவிலில் பார்த்ததை போட்டு உடைத்துள்ளார் கோபியின் அப்பா.

Baakiyalakshmi Serial Episode Update 27.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி.

கோபி ராதிகா மற்றும் அவருடைய மகளுடன் கோவிலுக்கு வந்ததை பார்த்த அவருடைய அப்பா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பாக்யா வந்தது கூட தெரியாமல் நடந்ததைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்.

துளசி மாலை அணிவதால், ஏற்படும் பலன்கள்

கோவிலில் பார்த்ததை போட்டு உடைத்த அப்பா.. அதிர்ச்சியில் உறைந்து போன கோபி - பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

இதனையடுத்து பாக்கியா என்ன மாமா என்ன ஆச்சு உடம்பு சரியில்லாததால் மாதிரி இருக்கீங்க எனக் கேட்கிறார். அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா நேரம் உக்காந்திட்டிருக்க அப்படியே கொஞ்ச நேரம் தூங்கி விட்டேன். அதான் ஒருமாதிரி கிறக்கமாய் இருக்கு என கூறினார். பின்னர் இருவரும் வீட்டுக்கு வந்தனர். மணி பத்து 45 ஆகியும் கோபி வீட்டிற்கு வரவில்லை. பாக்கியா சோபாவில் உட்கார்ந்தபடியே தூங்கி அதைப் பார்த்த அவருடைய மாமனார் பாக்கியா என அழைத்தார். மேல போய் தூங்கலாம்ல என கேட்டதற்கு அவர் இன்னும் வரல மாமா, அவருக்கு சாப்பாடு கொடுக்கணும்ல அதுதான் காத்துட்டு இருக்கேன் எனக் கூறுகிறார் பாக்கியா. நீ சாப்டியா என கேட்க இல்ல மாமா அவர் வந்து சாப்பிடட்டும் அப்புறம் சாப்பிட்டிருக்கிறேன் என சொல்கிறார். உங்க ரெண்டு பேருக்கும் ஒரே வாயா? நீ சாப்பிட வேண்டியது தானே. உடம்பு என்னத்துக்கு ஆகிறது என கூறுகிறார். சரி கோபிக்கு போன் போடு எனக் கேட்க இல்ல மாமா அவர் திட்டுவார் ஆபீஸ்ல வேலையா இருப்பார் என கூறுகிறார். நீ போன போடுமா என மீண்டும் சொல்ல போன் போட்டால் அவருடைய போன் ஸ்விட்ச் ஆஃப் என வருகிறது.

இந்த பக்கம் கோபி ராதிகா வீட்டில் மய்யூவுடன் கேம் விளையாடிக் கொண்டு இருக்கிறார். அதன் பிறகு மய்யூ தூக்கம் வருவதாக சோபாவில் படுத்துக்கொண்டு காலை தூக்கி கோபி மீது வைக்கிறார். அதிகாலை அழுத்தி விட சுகமாக இருப்பதாக கூறுகிறார் மய்யூ. பின்னர் மகிமை ரூமில் படுத்து தூங்க சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்புவதாக சொல்கிறார். வீட்டிற்கு போகாதீங்க இங்கேயே இருங்க என கூறுகிறார் மய்யூ. கோபி நாளைக்கு வருகிறேன் என சொல்கிறார். பின்னர் மயூ தூங்குவதற்காக ரூமுக்கு சென்ற பிறகு ராதிகா நீங்க வரலனாலும் கார் எடுத்து இருப்பேன் கோவிலுக்கு போய் பூஜை போட்டு இருப்பேன். ஆனால் இப்படி சந்தோஷமாய் இருந்திருக்க மாட்டேன் என கூறுகிறார். கோபி ராதிகாவை தன் தோள் மீது சாய்த்துக் கொண்டு ஆறுதல் கூறுகிறார். பின்னர் வீட்டிற்கு கிளம்புகிறார்.

கோபி வீட்டுக்கு வந்ததும் அவருடைய அப்பா ஏன் லேட் எதுக்கு லேட் என கோபமாக கேட்கிறார். ஆபீஸில் வேலையாக இருந்தேன் அதனால்தான் நேரம் ஆகிடுச்சு என கூறுகிறார். சரி சாப்பிட வாங்க என கேட்டதற்கு நான் வெளியில் சாப்பிட்டு விட்டேன் எனக் கூறுகிறார். வெளில சாப்பிட்டியா உடம்பு என்னத்துக்கு ஆகிறது? இங்க ஒருத்தி உனக்காக சாப்பிடாம காத்துட்டு இருக்கா. ஒரு போன் பண்ணி சொல்ல மாட்டியா. சமைக்காமல் இருந்திருப்பால. ஏண்டா அந்த ரெண்டு சப்பாத்தி வேஸ்ட் ஆகிடுச்சா? நாளையிலிருந்து சொல்றேன் என சொல்கிறார். பசங்க எல்லாம் பெரிய பசங்களாக ஆகிட்டாங்க ஒழுக்கமாக நடந்து கொள் என்னை பேச வைக்காத என கூறுகிறார்.

எங்க அப்பா அம்மா தான் சொல்லுவாங்க! – Actress Sanchita Shetty Speech

கோபி மேலே சென்று ராதிகாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். இங்கு நடந்ததையே நினைத்து தூக்கம் இல்லாமல் தவிக்கிறார் அவருடைய அப்பா. பிறகு மேலே எழுந்து சென்று கோபியின் ரூமில் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் எனக் கூறி விட்டு கதவை தாழ்பாள் போடுகிறார். ஏன் லேட்டு என மீண்டும் கேட்கிறார். ஆபீசில் வேலை பார்த்துட்டு வருகிறேன் என கோபி சொன்ன நேற்று வரைக்கும் நீ சொல்வதையெல்லாம் நம்பிட்டு தான் இருந்தேன். ஆனால் இனி நம்பமாட்டேன். இன்னைக்கு சாயந்திரம் அஞ்சரை மணிக்கு அம்மன் கோவிலுக்கு நானும் வந்ததிருந்தேன் என கூற கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.