கோபி முகத்தில் கரியைப் பூச பாக்கியா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

Baakiyalakshmi Serial Episode Update 23.09.21 : சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாக்கியலட்சுமி. பாக்கியா 1000 பேருக்கு சமைக்க ஆர்டர்ட் கிடைத்திருப்பது பற்றி தெரிந்த வீட்டார் அவரை மோசமாக கிண்டல் செய்தனர். கோபி உன்னால 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை எனத் திட்டினார். இதனால் ஆர்டரை வேண்டாம் எனக் கூறிய பாக்கியா நான் செய்கிறேன் என ஒப்புக்கொண்டார்.

இது சதித்திட்டம், இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் : பாகிஸ்தான் தகவல்

கோபி முகத்தில் கரியைப் பூச பாக்கியா செய்ய போகும் வேலை.. பரபரக்கும் பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் அப்டேட்.!!

அதன்பின்னர் பாக்கியா நேராக எழில் ஆபீஸ்க்கு சென்று அவரிடம் நடந்ததை கூறினார். உன்னால் முடியும் என ஊக்கப்படுத்தினார். இங்கிருந்து ராதிகா வீட்டிற்கு சென்றார் பாக்கியா. ராதிகாவின் விஷயத்தைக் கேட்டு உங்களால் முடியும் என நம்பிக்கை கொடுத்தார். அதன்பின்னர் நம்பிக்கையோடு நாமே செய்யலாம் சரி என கூறி விட்டு வீட்டிற்கு கிளம்பினார் பாக்கியா.

ஆபிசுக்கு சென்ற ஜெனி சென்ற வேகத்திலேயே வீட்டிற்கு வந்துவிட்டார். தொடங்கி வாங்கி வந்து கொண்டே இருந்ததால் ஆபீஸில் இருப்பவர்கள் வீட்டுக்குச் செல்லுமாறு கூறி விட்டதாக தெரிவித்தார். இதனால் கோபம் அடைந்த செழியன் ஜெனியை திட்டினார்.

பின்னர் ஈஸ்வரி என்னாச்சு? என கேட்க செழியனுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் விருப்பமில்லை என தெரிவித்தார். பின்னர் ஈஸ்வரி பாட்டி உனக்கு விருப்பம் இல்லையானு என்னனு கேட்டார். பின்னர் பாக்கியா வீட்டிற்கு வந்ததும் வீட்ல என்ன நடக்குதுனே தெரியாமல் ஊரை சுத்திட்டு இருக்க என திட்டி ஜெனி கூறியதை சொன்னார்.

நான் அதை பத்தி Future ல் பேசுகிறேன்! – Silambarasan TR Latest Press Meet

பின்னர் பாக்கியா ஜெனியிடம் நலம் விசாரிக்கிறார். ஆபிஸ்ல இருக்கவங்களுக்கு விஷயம் தெரியும் தானே என கேட்கிறார். கொஞ்சம் நாள் லீவு போட்டு ரெஸ்ட் எடுக்க சொல்ல செழியன் முகம் மாறுகிறது. இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் அப்டேட்.