குடும்பத்தினர் அனைவரும் ராமமூர்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ராமமூர்த்திக்கு 12 மணிக்கு விஷ் பண்ணுகிறார். பிறகு சாக்லேட் கொடுக்க ராமமூர்த்தி சந்தோஷப்படுகிறார். இருவரும் சந்தோஷமாக சிரித்து பேசி கொள்கின்றன.
பிறகு காலையில் பூஜை செய்துவிட்டு குடும்பத்தினர் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி ஆசீர்வாதம் வாங்குகின்றன. ஆனால் ராமமூர்த்தி ஃபோனை எடுத்து எடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அதற்கு ஈஸ்வரி என்ன பார்த்துட்டு இருக்கீங்க என்று கேட்க, எழில் தான் எனக்கு ஃபர்ஸ்ட் விஷ் பண்ணுவான் அதனால போன் பண்றேன் நான் பாத்துட்டு இருக்கேன் என்று சொல்லி வருத்தப்படுகிறார்.
பாக்கியாவிடம் செழியன் எழில் ஏன் பிறந்தநாளுக்கு கூப்பிட மாட்டேங்கறீங்க, நீங்க வீட்டை விட்டு அனுப்புனது எங்களுக்கு புடிக்கல தான் ஆனா அவனுடன் நல்லதுக்கு தான் அப்படின்னு சொன்னீங்க சரின்னு கம்முனு இருந்தோம் ஆனால், ஒரு பங்க்ஷன் அப்பயும் கூப்பிடலனா எப்படி மா என்று செய்யும் கேட்கிறார். அவனை ஒதுக்கீட்டீங்களா அவன் எதுக்குமே வரமாட்டானா என்று கேள்வி மேல் கேள்வி கேட்க அவன் வருவான் என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடிக்கிறார் பாக்கியா.
ராமமூர்த்தி எழிலை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க ஈஸ்வரி என் புடவை நல்லா இருக்கா என்று சொல்லி கேட்க சூப்பரா இருக்கு என்று சொல்கிறார். நீங்களும் இந்த பட்டு வேஷ்டியில் புது மாப்பிள்ளை மாதிரி இருக்கீங்க என்று சொல்லி பேசி கொள்கின்றன.
இனியா அண்ணனுக்கு போன் போடவா என்று கேட்க வேண்டாம் நேரா கோயிலுக்கு வருவான் என்று சொல்லி சொல்லுகிறார். ஆனால் ராமமூர்த்தி நம்பிக்கை இல்லாமல் பேசுகிறார்.
குடும்பத்தினர் கோவிலுக்கு கிளம்ப கோபி பார்த்து விடுகிறார். எதற்காக கோவிலுக்கு செல்கின்றன? கோபி எப்படி தெரிந்து கொள்ளப் போகிறார் இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்