ஊரிலிருந்து வந்த கையோடு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார் கோபியின் அப்பா.

Baakiyalakshmi Serial Episode Update 22.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஜெனி வீட்டுக்கு வந்ததை அடுத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது செழியன் ஜெனியிடம் பேசத் தொடங்குகிறார். இதுவரை பேசிக்கொள்வதை அமைதியாக அனைவரும் வேடிக்கை பார்க்கின்றனர். இப்ப வரைக்கும் என்னுடைய குழந்தை என்ன விட்டுப் போனது எனக்கு கஷ்டமாக தான் இருக்கும் என ஜெனி கவலைப்பட செழியன் எனக்கும் அந்த கஷ்டம் இருக்கு என்று கண் கலங்கினார். உடனே ஜெனி செழியா எதுக்கு இப்படி அழற என கண்துடைத்து கட்டி அணைத்துக் கொண்டார்.

இதனையடுத்து ஈஸ்வரி கால் வலிக்காக பாக்கியா தலைக்கு வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் ஜெனி உள்ளே வந்தார். ஜெனி பார்த்ததும் ஈஸ்வரி முகத்தை திருப்பிக்கொண்டார். பிறகு ஜெனி நான் தைலம் தேய்த்து விடுகிறேன் என தைலத்தை தேய்க்க பாக்கியா உன்னால செய்ய முடியும்னா செய் இல்லனா விடு என சொல்கிறார். ஆனால் அதையும் கேட்காமல் ஜெனி தைலம் தேய்கிறார். பிறகு நீங்க என்கிட்ட பேச வேண்டாம் என ஒரு நர்சா நினைச்சுக்கோங்க என கூறுகிறார். இந்த குழந்தை போனதுல எனக்கும் ரொம்ப வருத்தம் தான். நான் உங்களுக்காக தன் குழந்தையைப் பெற்றுகவே ஆசைப்பட்டேன் என கூறுகிறார். நான் கர்ப்பமாய் இருக்கேனா தெரிந்ததும் என்கிட்ட எவ்வளவு வந்த பேசினீங்க அது அன்பு எனக்கு இப்போவும் வேண்டும். பிறகு ஒரு வழியாக ஈஸ்வரி எனக்கு உன் மேல வருத்தம் எல்லாம் இல்ல. உன்கிட்ட நான் எப்படி பேசாம இருப்பேன் நீ என்னுடைய பேத்தி என கூறுகிறார். பிறகு ஒரு வழியாக ஈஸ்வரி சமாதனம் ஆகி விட அதன் பிறகு பாக்கியா நடந்த மொத்த கதையையும் கூறுகிறார். செழியன் செய்த தவறுகளை உணர்ந்து கொள்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், சிஎஸ்கே அணிக்கு இன்று பாராட்டு விழா..

ஊரிலிருந்து வந்த கையோடு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த கோபியின் அப்பா.. கோபி எடுக்கப்போகும் முடிவு என்ன?? பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்.

பிறகு வீட்டில் உள்ள அனைவரும் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கோபியின் அப்பா ஊரில் இருந்து வருகிறார். ஊரிலிருந்து வந்த அவரை எல்லோரும் நலம் விசாரிக்கின்றனர். இனியா என்ன கண்டுக்கவே இல்லை எனக் கூற வாடா செல்லக்குட்டி என அவரை கூப்பிட இனியா எனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க என கேட்கிறார். நீ கேட்பனு எனக்கு தெரியும் பை உள்ள இருக்கு என சொல்ல இனியா அதனை எடுக்கிறார். இந்த நேரத்தில் ஈஸ்வரி பீரோவில் இருந்து நில பத்திரங்களை எடுத்துட்டு போனீங்களா என கேட்கிறார். கொஞ்சம் வேலை இருந்துச்சு என கூறுகிறார். அதன்பிறகு உயில் எழுதி வைத்து விட்டு வந்ததாக கூறுகிறார். உயிர் எழுதிட்டு வந்தீர்களா எனது வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். ‌‌ நமக்கு பின்னாடி நம்ம சொத்து எல்லாம் கோபிக்கு தானே என ஈஸ்வரி சொல்ல கோபிக்கு எதுவும் கிடையாது என்னுடைய சொத்து எல்லாத்தையும் பாக்கியா பேரையும் என் பேரப்பிள்ளைகள் பேரிலும் பிரித்து எழுதி இருக்கேன் என சொல்கிறார். கோபிக்கு எழுதி வச்சாலும் ஆன பிறகு அது பாக்யாவுக்கும் அவனுடைய பிள்ளைகளுக்கும் தானா என கேட்க யாருக்கு எப்போ எப்படி இருப்பாங்கனு யாருக்கு தெரியும் என கூறுகிறார்.

Dialogue-லாம் Double Meaning-ல பேசுறாரு – Sasikumar & Sathish Funny Speech

உடனே கடுப்பான கோபி யாருக்கு வேணும் உங்க சொத்து. இதுவரைக்கும் ஊர்ல என்ன சொத்து இருக்குனு உங்க கிட்ட கேட்டு இருப்பனா.? நீங்க சொத்தை யாருக்குனாலும் எழுதி வையுங்கள். ஐ டோன்ட் கேர் என கூறி விட்டு மேலே சென்று விடுகிறார். பிறகு ஈஸ்வரி அவருடைய கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட இது என்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் சேர்த்த சொத்து. யாருக்கு என்ன கொடுக்க நீ எனக்கு தெரியும் அதபத்தி இந்த வீட்டில யாரும் பேசக்கூடாது என கூறி விடுகிறார்.

அடுத்ததாக ராதிகா வீட்டுக்கு போன கோபி நான் குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கேன்னு சொன்னேன் எங்க அப்பா ஊருக்கு போய்ட்டு வந்து எல்லாருக்கும் இது என்னுடைய மனைவி பேருக்கு எழுதி வச்சிட்டு வந்திருக்காரு. எந்த அப்பாவாவது ஒரு பிள்ளைக்கு இப்படி துரோகம் செய்வாரா என கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் அப்டேட்.