உன்னால ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை என கோபி மோசமாக திட்ட பாக்கியா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

Baakiyalakshmi Serial Episode Update 22.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்கியாவிடம் கோபி தான் இந்த வீட்டிற்கு இன்னமும் உழைச்சிட்டு இருக்கான். உன்னால என்ன புரோஜனம் இருக்கு என் பாட்டி அதை திட்டுகிறார் அவரது மாமியார் ஈஸ்வரி.

கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகியது ஏன்? ஒரு பவுலரின் கண்டுபிடிப்ப

இது ஒருபுறமிருக்க இன்னொருபுறம் ராதிகாவிற்கு உதவி செய்வதற்காக அக்கவுண்டில் பணம் எவ்வளவு இருக்கு என்பதை பார்த்த கோபிக்கு அதிர்ச்சி. அக்கவுன்டில் தேவையான பணம் இல்லை. ஆபீஸ் அக்கவுன்டில் எவ்வளவு பணம் இருக்கு என சுரேஷை கூப்பிட்டு கேட்கிறார். உடனே மூன்று லட்சம் ரூபாய் டிரான்ஸ்பர் செய்யுமாறு கூறுகிறார். அவ்வளவு பணம் இல்லை என சுரேஷ் கூறுகிறார்.

எல்லாருக்கும் சம்பளம் போட மீதி மூணு லட்சம் தான் இருக்கும். அதன்பிறகு ஆபீஸில் அன்றாட செலவுக்கு கூட காசு இருக்காது என்று கூறுகிறார். இதனால் கோபமடைந்த கோபி உங்களுக்கு எல்லாருக்கும் சம்பளம் கொடுத்து நான் சம்பளம் இல்லாமல் வேலை செய்யனுமா என கடுப்பாகிவிட்டார். இருக்கிற பணத்தை டிரான்ஸ்பர் செய். என்ன நடந்தாலும் பரவாயில்லை என கூறுகிறார். ‌‌

வீட்டிற்கு வந்த போது பாக்கியாவிடம் கோபத்தை காட்டுகிறார். ராஜசேகர் வீட்டுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக கிளம்பின பாக்கியாவை கண்டபடி திட்டி தீர்க்கிறார். உன்னால சல்லி பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை. நீ மட்டும் ஜாலியா இருக்க என கூறுகிறார்.

பைக்கில் உலகம் சுற்ற தயாராகும் Thala Ajith – சாகசப் பெண்ணிடம் ஆலோசனை! 

மாமியாரும் கணவரும் திட்டியதால் மனமுடைந்த பாக்கியா ராஜசேகர் வீட்டிற்குச் சென்று சாப்பாடு கொடுத்துவிட்டு இந்த ஆர்டரை எடுத்து செய்வதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு வருகிறார். இருப்பினும் எப்படி செய்வது என தெரியாமல் பாக்கியா செல்வியிடம் புலம்புகிறார். தன்னுடைய வீட்டில் இருப்பார்கள் எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என கூறி கஷ்டப்படுகிறார். எனக்கு மரியாதையும் இல்லை என் மேல நம்பிக்கையும் அவர்களுக்கு இல்லை என கூறி வருத்தப்படுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.