ராதிகா வீட்டிற்கு கோபியை அழைத்துச் செல்கிறார் இனியா.

Baakiyalakshmi Serial Episode Update 20.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பிக்னிக் செல்வதற்காக இனியா ராதிகா வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோபி வந்து எங்கே காலையிலேயே ரெடியாயிட்டு இருக்க இனியா என கேட்கிறார். பிக்னிக் போறதுக்காக ரெடியாயிட்டேன் என கூறுகிறார். இனியா நீ போய்த்தான் ஆகணுமா என கோபி கேட்கிறார். அந்த நேரத்தில் ராதிகா போன் செய்து இன்னும் பத்து நிமிஷத்தில் நானே வந்து உன்னை கூட்டிக் கொள்கிறேன் எனக் கூறுகிறார். இதனை கோபியிடம் கூற அவர் அதிர்ச்சி அடைகிறார்.

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில், இன்று அன்னாபிஷேகம் : பக்தர்களுக்கு அனுமதி

ராதிகா வீட்டிற்கு அழைத்துச் செல்லும் இனியா.. வசமாக சிக்கிய கோபி? பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் அப்டேட்

அவங்க எதுக்கு இங்கே வரணும் இனியாவை கூட்டிட்டு போயிட்டு அங்க விடுங்க என கூறுகிறார். அப்போதான் யார் யார் போகிறாங்க என்று தெரியும் என சொல்கிறார். பாக்கியாவிடம் இனியாவை ராதிகா வீட்டில் விட்டு விட்டு வருமாறு கூறுகிறார். என்னிடம் வண்டி இல்ல செல்வி எடுத்துட்டு போய் இருக்கா என பாக்யா கூறுகிறார். அதன் பின்னர் பாக்யாவின் மாமனார் நீயே கூட்டிட்டு போய் விட்டுட்டு வாடா என கோபியிடம் கூறுகிறார். அதெல்லாம் முடியாது எனக்கு ஆபிஸ்ல நிறைய வேலை இருக்கு என கோபி சொல்கிறார். பிறகு நானும் வரேன் என கோபியின் அப்பா கிளம்பி இனியா உடன் ராதிகா வீட்டிற்கு செல்கிறார். கோபி காரில் டிராப் செய்ய செல்கிறார். செத்தடா கோபி இன்னைக்கு நல்லா மாட்டுன என நினைத்துக் கொண்டே செல்கிறார்.

இந்த பக்கம் செழியன் ஜெனிக்கு போன் செய்கிறார். ஆனால் ஜெனி தொடர்ந்து போனை எடுக்காமல் இருக்கிறார். இந்த நேரத்தில் பாக்கியா வர பாக்யாவிடம் நீ எதுக்கும்மா இந்த வேலை எல்லாம் செஞ்சிட்டு இருக்க என கூறுகிறார். மேலும் ஜெனி உனக்கு போன் பண்ணல நான் போன் பண்ணா கூட எடுக்க மாட்றா ரொம்ப பண்ணுறா என கூறுகிறார். ஆனால் பாக்கியா ஜெனிக்கு சப்போர்ட் செய்து பேசியதை கேட்டதும் செழியன் நீ அவளுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ எனக் கூறிவிட்டு உள்ளே சென்று விடுகிறார். அதன்பிறகு பாக்கியா ஜெனிக்கு போன் செய்கிறார். நலம் விசாரிக்கிறார். அம்மா உன் கூடத்தான் இருக்காங்களா எனக் கேட்க ஆமா ஆண்ட்டி பக்கத்துல தான் இருக்காங்க பேசுறீங்களா என கூறியிருக்கிறார். பேசுறேன் குடும்ப என பாக்கியா கூறியதும் ஜெனியின் அம்மா வாங்க மறுக்கிறார். உடனே ஜெனி பக்கத்துல தான் இருந்தாங்க இப்போ ரெஸ்ட் ரூம் போய் இருக்காங்க என நினைக்கிறேன் என கூறி சமாளித்து கொள்கிறார். அதன்பிறகு பாக்கியா போனை வைத்ததும் ஆண்ட்டி மேல கோவமா இருக்கியா எனக் கேட்கிறார். இந்த வீட்ல இருக்கேன் எல்லாரு மேலயும் கோவமா இருக்கேன் என சொல்ல ஆண்ட்டி ரொம்ப நல்லவங்க அவங்க எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க என கூறுகிறார்.

இந்தப் பக்கம் கோபி இனியா மற்றும் அவருடைய அப்பாவை அழைத்துக்கொண்டு ராதிகா வீட்டிற்கு வழி தெரியாதவர் போல கேட்டு கேட்டு செல்கிறார். ராதிகா வீட்டுக்கு கொஞ்சம் தூரம் தள்ளியே வண்டியை நிறுத்திவிட்டு ஏதேதோ காரணம் சொல்லி அவர்களை நடந்து செல்ல சொல்கிறார். இருவரும் வீட்டு முன்னாடி போங்கப்பா எனக் கூற இன்னும் கொஞ்சதூரம் போய் வண்டியை நிறுத்தி விடுகிறார். அதன்பிறகு இருவரும் நடந்து செல்ல அந்த நேரத்தில் மயூ வெளியே வருகிறார்.

BIGG BOSS-ல சிலப்பேர் நடிக்குறாங்க.., கமல் Sir சண்டை போடணும் – Siddarth Open Talk..!

இனியா மயூவிடம் நீ எங்க அப்பாவைப் பார்த்தது இல்லல கார்ல தான் இருக்காரு பார்க்கிறாயா வா என அழைக்கிறார். அந்த நேரத்தில் ராதிகா மய்யூவை அழைக்க மூவரும் உள்ளே சென்று விடுகின்றனர். உள்ளே சென்றதும் கோபியின் அப்பா இனியா மற்றும் மயூவிற்கு பணத்தைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். கோபி காரை திருப்பி கொஞ்சம் தூரம் தள்ளி நிறுத்தியுள்ளார். ஏண்டா இப்படி பண்ற என கேட்டதும் நான் என்னப்பா பண்ணுறேன் அங்க லாரி வந்துச்சு அதுதான் எனக்கூறி சமாளிக்கிறார். அதன் பிறகு மீண்டும் ராதிகா வீட்டு வழிச் செல்லாமல் வேறு வழியில் அழைத்துச் செல்கிறார். ஒருவழியாய் இன்னைக்கு தப்பிச்சுட்டேன் என நிம்மதி அடைகிறார் கோபி. இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.