ஆர்டர் என்ற பெயரில் பாக்யாவுக்கு பெரிய ஆப்பு ஒன்று வந்துள்ளது.

Baakiyalakshmi Serial Episode Update 20.09.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த எபிசோட் ராஜசேகரின் மனைவி பாக்யாவுக்கு போன் செய்து வீட்டிற்கு வருமாறு கூறியிருந்தார்.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது, ஐசிசி வரட்டும் : இன்சமாம் வலியுறுத்தல்

ஆர்டர் என்ற பெயரில் பாக்யாவுக்கு வந்த ஆப்பு.. செல்வியிடம் சரியான சண்டை - பாக்கியலட்சுமி இன்றைய சீரியல் எபிசோட் அப்டேட்.!!

இருவரும் வீட்டிற்கு போனதும் ராஜசேகர் இதுவரைக்கும் எவ்வளவு ஆர்டர் எடுத்திருக்கீங்க எவ்வளவு பேர் வேலை செய்றாங்க என்றெல்லாம் கேள்வி கேட்டார். அதற்கு பாக்கியாவை பதில் சொல்ல விடாமல் செல்வி ஓவராக பில்டப் கொடுத்தார். பெரிய ஆபீஸ் வைத்திருக்கும் 25 பேர் வேலை செய்றாங்க 5 ஆயிரம் பேருக்கு கூட சமைத்துக் கொடுத்து இருக்கோம் என கதை கதையாக விட்டார்.

இதனையடுத்து எங்களது ஃபேக்டரியில் ஒரு ஃபங்ஷன் இருக்கு. அதற்கு ஒரு 1000 முதல் 1300 பேருக்கு சமைக்கணும் என பெரிய லிஸ்டை கையில் எடுத்து கொடுத்தார் ராஜசேகர். அப்போதும் செல்வி அதெல்லாம் அக்கா ஈஸியா பண்ணி விடும் என கதை விட்டார். ராஜசேகரும் ராஜசேகர் மனைவியும் கூட பாக்கியாவை பேசவிடாமல் ஆல் தி பெஸ்ட் எனக் கூறி அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் பாக்கியா வீட்டை விட்டு வெளியே வந்து செல்வியை திட்டித் தீர்த்தார். வீட்டிற்கு வந்தும் விடாமல் செல்வியை திட்டித்தீர்த்த அவர் எழிலிடம் பஞ்சாயத்து வைத்தார். நடந்ததைக் கேட்ட எழில் இதெல்லாம் ரொம்ப கஷ்டம் என கூறினார். அப்பவும் செல்வி அமைதியாக இருக்காமல் 36 வயதினிலே படத்தில் ஜோதிகா செய்ததை போல நாமளும் செய்யலாம் என கூறினார்.

மேடையில் கண் கலங்கிய அழுத நடிகர்! – ஆறுதல் கூறிய Shakeela

பாக்கியா எழிலிடம் நாளைக்கு போய் அவங்க கிட்ட இவ்வளவெல்லாம் செய்ய முடியாது என சொல்லிவிட போவதாக கூறினார். இருக்கிறதையும் போயிடும் போல என கூறினார். அதன் பின்னர் இரவு அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென இடைவிடாமல் சிரித்துக் கொண்டே இருக்கிறார் பாக்யாவின் மாமியார். என்ன ஏது என எல்லாரும் கேட்க ராஜசேகர் வீட்டில் நடந்ததை கூறுகிறார். இதனால் பாக்யாவின் முகம் சுருங்குகிறது. இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.