மாமியாரை எதிர்த்து ஜெனி வீட்டுக்கு கிளம்புகிறார் பாக்கியா.

Baakiyalakshmi Serial Episode Update 19.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஈஸ்வரி ஜெனி வீட்டுக்கு போகக்கூடாது. அவங்க அப்பாவை ஜெனியை கூட்டிட்டு வந்து விட்டால் விடட்டும் இல்லையாட்டி அவங்களே வைத்துகட்டும். நம்ப வீட்டிலிருந்து யாரும் போய் அவளை கூப்பிட கூடாது என கூற பாக்கியா அப்படியெல்லாம் விட முடியாது அத்தை. நம்ப புள்ளைங்க வாழ்க்கை கெட்டுப் போகறதை பாத்துட்டு இருக்க முடியாது. நாம ஒரு அடி எடுத்து வைத்தால் தான் நல்லது நடக்கும்னா எடுத்து வைக்கிறதுல தப்பு இல்ல. பிடிவாதம் பிடிக்காதீர்கள் இறங்கி வாங்க என கூறுகிறார்.

இன்றைய ராசி பலன்.! (19.11.2021 : வெள்ளிக் கிழமை)

மாமியாரை எதிர்த்து ஜெனி வீட்டுக்கு கிளம்பும் பாக்கியா.. கடைசியில் நடந்தது இதுதான் - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

என்னோட பேச்சுக்கு அப்போ இது வீட்டில் என்ன மரியாதை இருக்கு என கோபப்பட்டு அவர் உள்ளே சென்று விடுகிறார். இந்தப் பக்கம் எழில் அமிர்தா வீட்டிற்கு செல்கிறார். அங்கு குழந்தை எங்கே எனக் கேட்க அமிர்தா ஓட அம்மா ஊருக்கு கிளம்பி கிட்டு இருக்காங்க என அமிர்தாவின் மாமியார் கூறுகிறார். குழந்தை ஏன் எங்களால் எப்படிப் பார்க்க முடியும். அவங்க அம்மாவோட காலேஜ் முடியிற வரைக்கும் இங்க இருக்க சொன்னா இருக்க மாட்றாங்க என கூறுகின்றனர். பின்னர் அமிர்தாவின் அம்மா வெளியே வர அவரிடம் ஏன் ஊருக்கு போறீங்க என கேட்க ஊருல நிறைய வேலை இருக்கு என கூறுகிறார். இல்ல அவங்க கொஞ்சம் பயப்படுறாங்க நீங்க தைரியமாப் போயிட்டு வாங்க நாங்க பாப்பாவை பார்த்துக் கொள்வோம் என்று கூறுகிறார். பிறகு எழில் பாப்பாவை வாங்கி பொம்மையைக் கொடுத்து விளையாட வைக்கிறார். ‌‌எங்க கிட்ட கூட அவ இவ்வளவு ஒட்டுனது இல்லை என அமிர்தாவின் மாமியார் கூறுகிறார்.

பிறகு எழில் ஆபீசுக்கு வந்து சதீஷிடம் பேசும்போது சதீஷ் அமைப்புடன் காதல் வேண்டாம் என கூறுகிறார். பின்னாடி இதையெல்லாம் நெனச்சி நீ வருத்தப்படுவ என சொல்கிறார். ஆனால் எழில் அமிர்தாவை திருமணம் செய்வது உறுதி என உறுதியாக உள்ளார்.

இந்தப் பக்கம் ஈஸ்வரி பாட்டி செழியனிடம் நீ ஏன் இப்படி இருக்க பிரண்ட்ஸோட பேசு, நல்லா சாப்பிடு தாடியை ஷேவ் பண்ணு என சொல்லிக்கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில் பாக்கியாவும் கோபியின் ஜெனி வீட்டிற்கு கிளம்பி கீழே வருகின்றனர் ‌‌ கோபி தன்னுடைய அம்மாவுடன் ஜெனி வீட்டிற்கு செல்வதாக கூற செழியன் உற்சாகம் அடைகிறார். ஆனால் ஈஸ்வரி பாட்டு நான் போக வேண்டாம் என சொல்லிட்டு இருக்கேன் நீங்க பாட்டுக்கு கிளம்பினா என்ன அர்த்தம் என கேட்கிறார். பாக்கியா அவரை எதிர்த்து போயிட்டு பேசிட்டு வரோம் என கூறுகிறார். நீங்க போய் அசிங்கப்பட்டு தான் வர போறீங்க என கூறிவிட்டு ஈஸ்வரி பாட்டி உள்ளே சென்று விடுகிறார். பிறகு ஜெனி வீட்டுக்கு கிளம்பிய கோபி மற்றும் பாக்கியாவிடம் செழியன் எப்படியாவது ஜெனியை கூட்டி வந்து விடுங்கள் என கூறுகிறார்.

தாய் உள்ளம் கொண்டவர் சிம்பு! – Producer K.Rajan Bold Speech

இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிகிறது. இதனை தொடர்ந்து வெளியான புரோமோவில் ஈஸ்வரி கோபியிடம் போயிட்டு அசிங்கப்பட்டு தான் வந்தீங்க என கேட்கிறார். வந்தாளா அவ என கேட்க அந்த நேரத்தில் ஜெனி வாசலில் வந்து நிற்கிறார். ஜெனியை பார்த்த செழியன் மகிழ்ச்சி அடைகிறார்.