ராதிகாவை விவாகரத்து செய்துவிடு என ஈஸ்வரி சொல்ல கோபி அதிர்ச்சியாகி உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி கோபியிடம் நீ இங்கேயே இரு என சொல்கிறார். இதைக் கேட்ட கோபி அதிர்ச்சியடைந்து பதில் ஏதும் சொல்லாமல் இருக்க ஈஸ்வரி இனிமே நீ அங்க போக வேண்டாம் இந்த வீட்டிலேயே இரு நாமே எல்லோரும் பழையபடி ஒன்றாக இருக்கலாம் என சொல்கிறார்.

இதனால் கோபமான எழில் கிச்சனிலிருந்து வெளியே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட கோபி என்ன பேசுவது என தெரியாமல் அமைதியாக இருக்கிறார். ஈஸ்வரி இனிமே கோபி இந்த வீட்டில் தான் இருப்பான் என சொல்ல எழில் நாம யாரும் வேண்டாம்னு சொல்லிட்டு விட்டுட்டு போனவர் தானே, அவரை பற்றி நாம எதுக்கு கவலைப்பட வேண்டும் என சொல்ல பழசு எதுவும் பேச வேண்டாம் இனிமே கோபி இந்த வீட்டில் தான் இருப்பான் என ஈஸ்வரி உறுதியாக சொல்கிறார்.

இதனால் பாக்கியா அப்போ நான் இந்த வீட்டை விட்டு போய் விடுகிறேன் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எல்லோரும் நீங்க போகக்கூடாது என பாக்யாவுக்கு ஆதரவாக பேச ஈஸ்வரி நீ எதுக்கு போகணும் இந்த வீட்டிலேயே இரு என சொல்ல அது எப்படி முடியும்? எனக்கும் அவருக்கும் இப்போ எந்த உறவும் கிடையாது.

உங்க எல்லாருக்கும் அவரோட உறவிற்கு ஆனா எனக்கு எந்த உறவும் கிடையாது அப்படி இருக்கும்போது நான் எப்படி அவருடன் ஒரே வீட்டில் இருக்க முடியும் என கேட்க ஈஸ்வரி எனக்கும் கோபிக்கும் அம்மா மகன் உறவு இருக்கு, அவனுக்கும் அவனது பிள்ளைகளுக்கும் அப்பா மகன் உறவு இருக்கு.. அப்படி இருக்கும்போது அவன் ஏன் இந்த வீட்டில் இருக்கக் கூடாது? அவன் இங்கதான் இருப்பான் என மீண்டும் உறுதியாக சொல்ல பாக்கியா அப்படின்னா நான் எனக்கான முடிவை எடுத்துக் கொள்கிறேன் என அதிர்ச்சி கொடுக்கிறார்.

மறுபக்கம் ராதிகா துணிகளை பேக்கில் எடுத்து வைத்துக் கொண்டு ஈஸ்வரி வீட்டுக்கு கிளம்ப தயாராக அவரது அம்மா எக்காரணத்தைக் கொண்டு உன்னுடைய கௌரவத்தை நீ விட்டுக் கொடுக்கக் கூடாது. நீ அங்க போ, முதல்ல எல்லாரும் சத்தம் போடுவாங்க ஆனா அதையெல்லாம் கண்டுக்காத, போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்பேன்னு சொல்லு. இதுவரைக்கும் நீ வராததுனால அவங்களுக்கு குளிர் விட்டு போயிருக்கும். நீ போய் நின்னதும் அவங்களுக்கு செருப்பால் அடிச்சா மாதிரி இருக்கணும் என ஏத்திவிட்டு அனுப்புகிறார்.

மேலும் ஈஸ்வரி கோபியிடம் நீ அவளை கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் தான் இப்படி மாறிட்ட, இனிமே அவ உனக்கு தேவை இல்லை விவாகரத்து கொடுத்துடு என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

கோபி அதெல்லாம் சரி வராது நான் கிளம்புறேன் என சொல்ல இனியா நீங்க இங்கேயே இருங்க டாடி என தடுக்க கோபி இனியாவை சமாதானம் செய்து வெளியே செல்ல அவரை தடுத்து நிறுத்தும் ஈஸ்வரி, அம்மா உன்னுடைய நல்லதுக்காக தான் சொல்லுவேன் என பேச கோபி இனிமேல் சத்தியமா குடிக்க மாட்டேன். இந்த வீட்டில் இருப்பதெல்லாம் சரி வராது என சொல்லி வெளியே கிளம்பும்போது ராதிகா வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்க அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.