எல்லாத்துக்கும் நீதான் காரணம் என செழியனிடம் கோபப்பட்டு வீட்டைவிட்டு கிளம்புகிறார்.

Baakiyalakshmi Serial Episode Update 16.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஜெனிக்கு கரு கலைந்து விட்டதை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் கோபியின் அப்பா. அப்போது மேலே இருந்து கீழே இறங்கி வருகின்றனர் கோபியும் பாக்கியாவும். மூவரும் இது குறித்து பேசி விட்டு கோபி பாக்கியாவிடம் ஜெனியின் வீட்டில் சொல்லி விட்டாயா என கேட்கிறார். எப்படி சொல்றதுன்னே தெரியலங்க ஜெனி அவங்க போன் பண்ணதுக்கு கூட உண்மையை சொல்லல என கூறியுள்ளார். சரி நான் தூங்கிடுவேன் எனக்கு போன் எடுக்க இந்த நேரத்தில் வேண்டாம் காலையில் சொல்லிக் கொள்ளலாம் என அவருடைய அப்பா கூறுகிறார்.

பள்ளி மாணவிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

எல்லாத்துக்கும் நீதான் காரணம்.. செழியனிடம் கோபப்பட்டு வீட்டை விட்டு கிளம்பும் ஜெனி - பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

விடிந்ததும் ஈஸ்வரி பாட்டி காப்பி குடித்துக் கொண்டிருக்க அப்போது பாக்கியாவிடம் ஜெனி சாப்பிட்டாலா இல்லையா எனக் கேட்கிறார். இன்னும் இல்லை அத்தை ஜூஸ் குடிச்சா கொஞ்ச நேரம் கழிச்சி கீழே வர்றேன்னு சொன்னா எனக் கூற அதன் பின்னர் செழியன் மற்றும் ஜெனி கீழே சாப்பிட வருகின்றனர். இருவரும் கீழே வர ஈஸ்வரி பாட்டி ஜெனியிடம் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார். நான் என்ன பண்ண பாட்டி? என் மேல எதுக்கு கோபமா இருக்கீங்க என கூற ஈஸ்வரி உன் மேல கோவம் இல்லை பாக்கியா மேலதான் கோபம் என கூறுகிறார். அவதான் தேவையில்லாத பிரச்சினைகள் எல்லாம் கொண்டு வந்து உனக்கும் நிம்மதியில்லாமல் செய்து இன்னைக்கு அந்த குழந்தையே இல்லாமல் பண்ணிவிட்டா என கூறுகிறார். இதனால் ஜெனி இதற்கு ஆன்ட்டி காரணம் இல்லை. இதற்கு காரணம் நாங்கள்தான். குழந்தை வேண்டாம் வேண்டாம்னு அது இல்லாம போயிடுச்சு எனக் கூறிவிட்டு அழுது கொண்டே மேலே சென்று விடுகிறார். ஜெனி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியான ஈஸ்வரி அவ என்ன சொல்லிட்டு போறா பார்த்தியா என சத்தம் போடுகிறார்.

மேலே சென்ற ஜெனி செழியனிடம் எல்லாத்துக்கும் நீதான் காரணம்.. இந்த குழந்தை உருவானதிலிருந்து நீ இந்த குழந்தையை வெல்கம் பண்ணவே இல்ல. கலைத்து விடலாம் என சொல்லிக்கிட்டே இருந்த. எனக்கு அபாட் ஆகலனாளும் இன்னைக்கு நீ கூட்டிட்டு போயிட்டு அபார்ட் பண்ணி தான் இருப்ப அழுதுகொண்டே செழியனிடம் சண்டையிட இதையெல்லாம் பாக்கியா பார்த்து விடுகிறார்.

Thalaivar ரஜினி Sir Style-ல யாராலும் அடிச்சுக்க முடியாது..! | Annaatthe Teaser 

அதன்பிறகு ஜெனியின் அப்பா அம்மா வீட்டிற்கு வருகின்றனர். எப்படி ஆச்சு என்ன ஏது என ஜெனிடம் விசாரிக்கின்றனர். தூக்கத்தில் இப்படி நடந்து விட்டதாக பாக்கியா கூறுகிறார். நாங்க ஜெனிய கூட்டிட்டு போறோம். உடம்பு சரியானதும் அனுப்பி வைக்கிறோம் என கூறுகிறார் அவருடைய அம்மா. ஜெனி வந்தா கூட்டிட்டு போங்க அவ இங்க தான் இருக்கேன் விருப்பப்படுவா என கூறுகிறார் தாத்தா. ஜெனி தன் அம்மாவுடன் செல்ல விருப்பப் படுவதாக கூறிவிட்டு மேலே செல்கிறார். கூடவே சென்ற செழியன் போக வேண்டாம் என கூற ஜெனி நான் போகத்தான் போகிறேன் என சொல்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.