ஜெனியால் குடும்பத்தாருக்கு ஏற்பட்ட எதிர்பாராத அதிர்ச்சி.

Baakiyalakshmi Serial Episode Update 14.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபி நண்பரிடம் பணம் கேட்பதை பார்த்த பாக்கியா வீட்டு செலவுக்கு பணம் தர வேண்டாம். என்னிடம் இருக்கு என கூறினார். கோபி பணம் தரலனு குத்தி காட்டுறியா என கேட்டார்.

பின்னர் மறுநாள் இனியா ஸ்கூல் பீஸை கட்டவில்லை. இன்னைக்கு தான் கடைசி தேதி, கட்டலனா நான் ஸ்கூல் போக மாட்டேன். உங்கள் கிட்ட பேசவும் மாட்டேன் என கூறினார். பணம் இல்லாமல் என்ன செய்வது என கோபி தவித்தார். இனியாவிடம் இன்னைக்கு கண்டிப்பாக கட்டி விடுகிறேன் என சமாதானம் செய்தார்.

ஆபிஸ்க்கு போன கோபி அங்கும் பண பிரச்சினையை பற்றி தான் யோசித்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் பாக்கியா ஆபிஸ்க்கு வருகிறார். அவரை உட்கார வைத்து வண்டில் எதுக்கு இவ்வளவு தூரம் வந்த என கேட்கிறார். இனியாவுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும் என பாக்கியா கூற கட்டி விடுகிறேன் என்று கூறுகிறார் கோபி. உங்களுக்கு டைட்டான போயிட்டு இருக்குனு தெரியும் என கூறி கோபியின் கையில் பணத்தை எடுத்து வைக்கிறார் பாக்கியா. நான் உன்கிட்ட கேட்டனா என கோபி கேட்க இல்லைங்க இது சமையல் ஆர்டர் எடுத்த பணம். என்கிட்ட இருந்தாலும் சும்மா இருக்கும் இதை வச்சி பணம் கட்டிருங்க என கூறுகிறார்.

மகாபாரதம் வழங்கிய ஆயுதபூஜை.!

கோபிக்கு பாக்கியா செய்த உதவி.. ஜெனியால் குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் அப்டேட்.!!

இது என் பணம்னு நினைக்கறீங்களா? நம்மளோட பணம். குடும்பத்துல உங்கள் பணம் என் பணம்ல இல்ல, நம்ம வீடுனா அது நம்ம ரெண்டு பேரும் தானே? இதுவரைக்கும் இந்த குடும்பத்த நீங்கள் மட்டும் தான் பார்த்துட்டு இருந்தீங்க இனி நானும் உங்களோட சேர்த்து வாழ்க்கை என்ற வண்டியை ஓட்ட ஆசைப்படுகிறேன். உங்கள் வேகத்துக்கு ஒடலனாலும் பின்னால் இருந்து வண்டியை தள்ளி விடவாவது ஆசைபடுறேன் என பேசிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

உங்க நைனா இந்த Shirt போட்ட Suresh Raina மாதிரி இருப்பாரு 

இரவு ஜெனியும் செழியனும் குழந்தை வேண்டும் வேண்டாம் என சண்டை போட்டு கொள்கிறனர். வெளியில் இவர்கள் இருவரும் சண்டை போட்டு கொள்ளும் சத்தம் கேட்டு கோபியிடம் கூறுகிறார் பாக்கியா. கோபி அவங்க பிரச்சினையை அவங்க பார்த்துபாங்க என கூறிய கோபி நீ எல்லாரையும் கவனிச்சிக்கற மாதிரி உன்னையும் கொஞ்சம் கவனிச்சிக்க என கூறுகிறார். நேரத்துக்கு போய் தூங்கு என சொல்கிறார்.

மறுநாள் காலையில் ஜெனி பதறியடித்து கொண்டு கீழே ஓடி வருகிறார். எல்லாரும் என்ன ஏது என விசாரிக்க பாத்ரூம் போனால் ரத்தமாக வருகிறது என்று கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.