பாக்யாவை வீட்டை விட்டு வெளியே செல்ல சொல்கிறார் கோபி.

Baakiyalakshmi Serial Episode Update 07.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. அமிர்தாவின் அம்மா திடீர்னு படபடப்பாக இருப்பதாக கூறுகிறார். உடனே அமிர்தா மருத்துவமனைக்கு போகலாம் நான் போய் ஆட்டோ பிடித்து வருகிறேன் எனக் கூறுகிறார். ஆனால் என்னை விட்டு போகாதே பயமாக இருக்கிறது என்கிறார். அதன் பின்னர் அவருடைய அப்பாவுக்கு போன் செய்ய அவருடைய போன் வீட்டிலேயே இருக்கிறது.

பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே செல்ல சொல்லும் கோபி.. எழில் எடுக்கும் முடிவு - பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் அப்டேட்

அமிர்தாவின் அம்மா எழிலுக்கு போன் செய்யச் சொல்கிறார். எழில் போனை எடுக்காமல் கட் செய்கிறார். மறுபடியும் எழிலுக்கு போன் செய்ய மீண்டும் கட் செய்கிறார்.

இந்த பக்கம் கோபி பாக்யாவை திட்டுவது மட்டுமல்லாமல் இரண்டு நாளில் பணம் கொடுக்க முடியாது. உன்னால் தினமும் பிரச்சனை தான். பணம் கேட்டு யாராச்சு இங்க வந்து நின்னா உன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவேன் என கூறுகிறார். இதனால் பாக்கியா மனமுடைந்து போய் அழுகிறார். ஜெனி பாக்கியாவை சமாதானம் செய்வது மட்டுமல்லாமல் என் அம்மாவிடம் கூறி பணம் வாங்கித் தருவதாக கூறுகிறார். பாக்கியா வேண்டாம் என்றுதான் கூறுகிறார். இந்த நேரத்தில் ஈஸ்வரி வந்து என்ன பாக்கியா சம்மந்தி வீட்டுல பணம் கேட்க போறியா? அடுத்து கோபிய அவங்க வீட்டுல அசிங்கப்படுத்த போறியா என திட்டுகிறார். ஜெனியை செழியன் திட்டி உள்ளே அழைத்துச் செல்கிறார்.

எழில் அந்த நம்பரை டிரேஸ் செய்து ஆந்திராவிற்கு செல்கிறார். அங்கு சென்று ஒருவரிடம் முகவரி கேட்டு அந்த நம்பரின் முகவரிக்கு சென்று விசாரிக்கிறார். அவர் இதைத் தவறான முகவரி என கூறுகிறார். இந்த நேரத்தில் பாக்கியா போன் செய்து எங்கே இருக்கிறாய் பணம் கிடைத்து விடுமா கிடைக்காதா என கேட்கிறார்.

அம்மாவுக்கு ஆறுதல் கூறுகிறார். பணம் கிடைத்துவிடும் என நம்பிக்கை செல்கிறார். பின்னர் மறுநாள் பாக்கியா அனைவருக்கு காபி கொடுக்க அந்த நேரத்தில் பாத்திரத்தில் வாடகைக்கு கொடுத்தனர் வந்து பணம் கேட்கிறார். நாளைக்கு பணம் தரலைன்னா அவ்வளவுதான் என கூறிவிட்டு செல்கிறார். மீண்டும் கோபி பாக்கியாவை பிடித்து திட்டுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.