முருகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் திவ்யா கணேஷ்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ்.
இது மட்டும் இல்லாமல் மகாநதி சீரியலில் கங்கா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வந்திருந்தார். ஆனால் சமீபத்தில் அவருக்கு டெங்கு காய்ச்சல் வந்ததால் மகாநதி சீரியலில் இருந்து விலகினார்.
தற்போது காய்ச்சலில் இருந்து குணமாகி,தனது தோழியான கம்பம் மீனாவுடன் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.