பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் ஜெனி வெளியிட்டிருக்கும் சூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் பிரபல முன்னணி சீரியல் நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் திவ்யா கணேஷ். பல சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி என்னும் மூத்த மருமகள் கதாபாத்திரத்தில் கர்ப்பிணி பெண்ணாக நடித்து வருகிறார். இத்தொடர் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவராக மாறியிருக்கும் இவர் தற்போது தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் இந்த சீரியலில் சமீபத்திய ஒளிபரப்பான எபிசோடில் கர்ப்பமாக இருக்கும் ஜெனி கீழே விழுவது போன்ற காட்சி விறுவிறுப்பாக காட்டப்பட்டது. ஆனால் அந்தக் காட்சியின் படப்பிடிப்பின் போது திவ்யாவுக்கு கீழே விழுந்ததில் கையில் வளையல் குத்தி ரத்தம் வரும் அளவிற்கு நிஜமாகவே காயம் ஏற்பட்டுள்ளது. அதன் வீடியோவை நடிகை திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதன் வீடியோ தற்போது பயங்கரமாக வைரலாகி வருகிறது.