
விஜய் டிவி கொடுத்த ஏமாற்றத்தை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் சதீஷ்.

இந்த சீரியலின் பெரிய பில்லராக இந்த சதீஷ் தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் கோபி இன்னும் 10 அல்லது 15 எபிசோடுகளில் சீரியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள இன்னொரு வீடியோவில் வாழ்க்கையில் எதிர்பார்ப்பு என்பது இருக்கக்கூடாது எதிர்பார்ப்பு இருந்தால் அது பெரும்பாலும் ஏமாற்றத்தில் தான் முடியும். நேற்று வரை நான் பெரிய புத்திசாலி உலகத்தையே மாற்றிவிடலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் நான் ஒரு முட்டாள் என்பது எனக்கு இன்று தான் புரிந்தது ஆகையால் நான் என்னையே மாற்றிக் கொண்டேன். உலகத்தை மாற்ற முடியாது என்பதால் என்னை நானே மாற்றிக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

விஜய் டிவி விருது விழா நிகழ்ச்சியில் சதீஷ் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் இவருக்கு எந்த ஒரு விருதும் வழங்கப்படவில்லை. இதுவே இவரது வெளியேற்றத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது.