கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் போட்டோ வெளியிட்டுள்ளார் பாக்கியலட்சுமி ரேஷ்மா.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. அதன் பிறகு தமிழ் சின்னத்திரையில் பல சேனல்களில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சீதாராமன் என்ற சீரியலில் செம்பருத்தி அகிலாண்டேஸ்வரி போன்ற ஒரு வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதன் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகின.

இது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவ சமீபத்தில் சீரியல் குழு தொடர்ந்து ராதிகாவாக ரேஷ்மா தான் நடிக்கப் போகிறார் என விளக்கம் அளித்தது. இப்படியான நிலையில் ரேஷ்மா கொஞ்சம் கூட மேக்கப் இல்லாத புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு பாக்கியலட்சுமி ஹாஸ்டேக் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.