கிளம்பிய எதிர்ப்புகளை அப்படியே பாராட்டாக மாற்றியுள்ளது பாக்கியலட்சுமி சீரியல் புரோமோ.

Baakiyalakshmi Promo Reaction From Fans : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கடந்த சில தினங்களாக இனியா படிக்கும் பள்ளியில் அவருடைய தோழி நிகிதா என்பவருக்கு கம்ப்யூட்டர் மாஸ்டர் பாலியல் தொந்தரவு கொடுப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகின. இது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல் அந்த மாணவிகள் இந்த பிரச்சினையை வீட்டிலும் சொல்லாமல் பள்ளியிலும் சொல்லாமல் கடைசியில் நிகிதா தற்கொலைக்கு முயற்சி செய்தது அந்த காட்சிகள் கடும் எதிர்ப்பை சந்தித்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ பலரையும் பாராட்ட வைத்து வருகிறது.

அந்த பள்ளியின் பிரின்சிபல் நிகிதாவின் தற்கொலைக்கு பள்ளி எந்த வகையிலும் காரணமில்லை என பேட்டி கொடுக்க அதனை எதிர்த்து பாக்கியா உண்மைகளை பத்திரிக்கைக்கு சொல்கிறார்.

நிஜத்திலும் இதுபோலத்தான் இருக்க வேண்டும் என பலரும் பாராட்டி வருகின்றனர். பாக்கியலட்சுமி சீரியலில் இந்த எபிசோட் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதேபோல் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொள்வது ஒன்று கட்டப்பட்ட காட்சிக்கு பதிலாக அவர் துணிந்து போராடி வெல்வது போல் காட்சியை வடிவமைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.