Baakiyalakshmi Jenifer in Baby Shower Video

வயிற்றில் குழந்தையை வச்சுக்கிட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் செம குத்தாட்டம் போட்டுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.

Baakiyalakshmi Jenifer in Baby Shower Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ‌‌இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெனிஃபர். இவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இவர் கர்ப்பமான அதன் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார்.

திருவண்ணாமலையில், 19-ந்தேதி மகாதீப தரிசனம் : பக்தர்களுக்கு அனுமதி?

மேலும் இவருடைய கதாபாத்திரம் நெகட்டிவ் ஆக மாற இருப்பதாகவும் தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து ராதிகா என்ற கதாபாத்திரத்தில் தற்போது ரேஷ்மா நடித்து வருகிறார். கோபி ராதிகாவுடன் நெருங்கி பழகி வருவது அவருடைய அப்பாவுக்கு தெரிந்துவிட்டது. ராதிகாவை விட்டு பிரிய முடியாது என்ற அளவிற்கு சென்று விட்டார்.

Jai Bhim Issue: 5 கோடி வரை இழப்பீடு கொடுக்க வேண்டும் – பா.ம.க.வழக்கறிஞர் பாலு ஆவேசம்.! | Suriya | HD

இதனால் இனி ராதிகா கதாபாத்திரம் பாக்யாவுக்கு வில்லியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வரும் ஜெனிபருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடைபெற்றது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சி அவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.