ராதிகா கோபிக்கு நச்சென முத்தமிடும் காட்சி மீம்ஸ் கிரியேட்டர்களால் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

Baakiyalakshmi Gopi and Radhika in Romance Mems: தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் சதீஷ் என்பவர் நடித்து வருகிறார். அவருக்கு மனைவியாக பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடித்து வருகிறார். தனது மனைவியுடன் வாழப் பிடிக்காத கோபி தனது கல்லூரி காதலியான ராதிகாவிடம் நெருக்கமாக பழகி வருகிறார்.

பாக்கியாவா ராதிகாவா? என்ற சூழல் வந்தால் நான் நிச்சயம் ராதிகா பக்கம்தான் நிற்பேன் என உறுதி கூறி வருகிறார். எவ்வளவு நாள் என் அப்பா பேச்சைக் கேட்டுட்டு என் வாழ்க்கையை அழித்துக் கொண்டேன். இனிமேல் எனக்காக வாழ போகிறேன் ராதிகாவை எக்காரணத்தைக் கொண்டும் யாருக்காகவும் விட்டு தர மாட்டேன். எனக்கு ராதிகா வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். ‌‌

அவர்தான் எனக்கு வாய்ப்பு கொடுத்தாரு – மேடையில் Live ஆக பாடிய Sivangi! | Anandham Vilayadum Veedu

இந்தியா-ரஷ்யா பேச்சுவார்த்தை : ரூ.5,200 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானது

இதனால் கோபி ராதிகாவை வைத்து பல்வேறு வகையான மீம்ஸ் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதகளம் செய்து வருகின்றனர் மீம்ஸ் கிரியேட்டர்கள்.

இந்த நிலையில் தற்போது இவர்கள் ராதிகா கோபியின் கண்ணத்தில் முத்தமிட அவர் மெய் மறந்து போனது போல புகைப்படங்களை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாகப் பரவி வருகின்றன.