பாக்கியா கேட்ட கேள்வியால் பொய் சொல்லி சிக்கியுள்ளார் கோபி.

Baakiyalakshmi Episode Update 24.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமானது சீரியல் பாக்கியலட்சுமி. ராதிகாவின் வீட்டிற்கு வந்த உறவினர்கள் கிளம்பியதும் மயூ அவருடைய அம்மாவிடம் வந்து இங்கே கோபி எங்களை கல்யாணம் பண்ணிக்க போறீங்களா என கேட்டார். இதனால் ராதிகா அதிர்ச்சியாகி உனக்கு யார் சொன்னது எனக் கேட்டார். வீட்டுக்கு வந்திருந்த அங்கிள் ஆன்ட்டி கிட்ட பாட்டி சொன்னதை நான் கேட்டேன் என கூறுகிறார். ஏன்மா என ராதிகா கேட்க மயூவுக்கும் எல்லாம் தெரியனும் என கூறுகிறார்.

பாக்கியா கேட்ட கேள்வி.. பொய் சொல்லி சிக்கிய கோபி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

எந்த உறவுமே இல்லாமல் அவர் வீட்டுக்கு வந்து போவது சரியாக இல்லை. மய்யூ நீ கூட பக்கத்துல இருக்கவங்க எல்லாம் சிரிக்கிறாங்க என சொன்னேன்ல. அவரு அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா யார் கேட்டாலும் உங்க அப்பானு சொல்லலாம் எனக் கூறுகிறார். அப்போ என்னோட அப்பாவை என்னன்னு சொல்றது என மயூ கேட்க இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அவன் உனக்கு அப்பனா அவன் எல்லாம் ஒரு ஆளாவே நினைக்காத என ராதிகாவின் அம்மா கூறுகிறார். பிறகு மையோ கோபி அங்கிள் நல்ல அங்கிள் தான், நான் கேட்டதெல்லாம் வாங்கித் தருகிறார். எனக்கு ஓகே தான் ஆனா கல்யாணம் ஆனதும் என்னை விட்டுப் போய்விட மாட்டீர்களா என மயூ கேட்க அப்படி எல்லாம் போக மாட்டேன் என கண்கலங்கி அழுகிறார்.

இந்த பக்கம் விடிந்ததும் எழில் தனது அம்மாவை அழைத்து அம்மா நீ நல்லா தான இருக்க என கேட்கிறார். நீ விட்டுப்போய்டுவியோனு தான் அவர் பயப்படனும் அவர் விட்டு போய் விடுவார் என்று நீ பயப்படக்கூடாது எனக் கூறுகிறார். யாரும் யாரையும் விட்டு போகக் கூடாது என பாக்கியா சொல்ல ‌ யாரும் யாரையும் விட்டு போக மாட்டாங்க எல்லோரும் இப்படியே ஒன்னா சந்தோஷமாகத் தான் இருப்போம் என எழில் சொல்கிறார்.

பாக்கியா கேட்ட கேள்வி.. பொய் சொல்லி சிக்கிய கோபி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு ஜெனியின் அம்மா கல்யாணம் ஆல்பம் ஃபோட்டோ ஒன்றை பிரேம் போட்டு எடுத்து வந்து கொடுக்கிறார். அதனை வீட்டு ஹாலில் மாட்டி வைக்கின்றனர். பிறகு பெயிண்ட் அடிக்க போவதாக கழட்டிய போட்டோ எல்லாம் எங்கே கோபியின் அப்பா கேட்க தெரியல மாமா என்ன பாக்கியா கூறுகிறார். பிறகு பாக்கியா கோபியின் அப்பா மற்றும் ஜெனி என மூவரும் அந்த போட்டோக்களை தேடுகின்றனர். இங்கேயும் கிடைக்காததால் கோபி வந்ததும் பாக்கியா அந்த போட்டோக்கள் பற்றி கேட்க கோபி கோபம் கொள்கிறார். எங்க வச்சேன்னு தெரியல ஞாபகம் வந்ததும் சொல்றேன் என கூறுகிறார்.

பிறகு ரூமுக்குள் யாருக்கும் தெரியாத இடத்தில் வைத்து இருந்த போட்டோக்களை எடுத்து பார்க்க அந்த நேரத்தில் பாக்கியா வர உடனே அதனை மறைத்து விடுகிறார். மறுநாள் கோபி ஆபிசுக்கு சென்றதும் பாக்கியா மேலே ஏறிப் பார்த்தபோது போட்டோக்கள் மறைத்து வைத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

இவர் எதுக்கு போட்டோவை மறைத்து வைத்துவிட்டு எங்க வச்சனு தெரியல என பொய் சொல்லணும் என யோசிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.