வீடு விஷயத்தில் கோபி எடுத்த முடிவால் பாக்யாவுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அமிர்தாவும் எழிலும் பாக்கியாவுக்கு நன்றி சொல்கின்றனர். எங்களால உங்களுக்கு வீட்ல எவ்வளவு பிரச்சனை என சொல்ல பாக்கியா இருவருக்கும் ஆறுதல் சொல்லி நல்லபடியாக வாழ்ந்து காட்டணும்.

உங்களுடைய வாழ்க்கை உங்கள மாதிரி கல்யாணம் பண்றவங்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கணும், இதுக்கப்புறம் தான் பிரச்சனையே ஆரம்பிக்கப் போகுது. எல்லாரும் உங்கள கவனிக்க தொடங்குவார்கள் என அறிவுரை வழங்குகிறார். பிறகு ஜெனி போல அன்பாக இருந்து அன்பால் ஜெயிக்க வேண்டும் என சொல்ல அமிர்தா கண்டிப்பாக அப்படி நடந்து கொள்வேன் என வாக்கு கொடுக்கிறார்.

அதன் பிறகு பாக்கியா இருவரையும் ரூமுக்கு அழைத்துச் சென்று நீங்க இங்க தங்கிக்கங்க, ரெஸ்ட் எடுங்க என்ன சொல்லி பாப்பாவை தூக்கிக் கொண்டு கீழே வர எழில் உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்கு தானே என கேட்க அமிர்தா உங்க மேல முழு நம்பிக்கை இருக்கு என கூறுகிறார்.

அதன் பிறகு எழில் கீழே இறங்கி வர ஈஸ்வரி எழுந்து உள்ளே செல்ல எழில் பாட்டியிடம் பேச முயற்சி செய்ய ஈஸ்வரி கோபி நாளைக்கு வந்து வீட்டை காலி பண்ண சொல்லுவான் இந்த குடும்பம் சின்னா பின்னமா சிதற போகுது சந்தோஷமா இரு என சொல்ல பாக்கியா வேற வீடு பாத்து இருக்கேன் அத்தை என சொல்ல செழியன் நானெல்லாம் உன் கூட வரமாட்டேன் என கூறுகிறான். ஜெனி நான் உங்க கூட வருவேன் ஆன்ட்டி என சொல்ல செழியன் அதிர்ச்சி அடைகிறான்.

நான் எது நடக்க கூடாதுன்னு நினைச்சேனோ அது நடக்க போகுது என ஈஸ்வரி கோபப்பட்டு உள்ளே சென்றுவிட ராமமூர்த்தி பிள்ளையார் சுழி போட்டது என் புள்ள என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கேன் என வருத்தப்படுகிறார்.

அதன் பிறகு இனியா தாத்தாவிடம் நம்ம வீட்டுக்கு போயிடலாமா என கேட்க அங்கு வரும் கோபி டாடியை விட்டு எங்கும் போகக்கூடாது என சொல்கிறார். பிறகு ராமமூர்த்தி வீடு பற்றி பேச கோபி நான் கொடுத்த கெடு இன்னையோட முடியுது நாளைக்கு போய் நிற்பேன், பணத்தை கேட்பேன் வீட்டை காலி பண்ண சொல்லுவேன் என்ன சொல்ல இனியா மற்றும் ராமமூர்த்தி என இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.