பள்ளிக்குப் போன கோபியை பார்த்து போலிஸ் சொன்ன வார்த்தையால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Baakiyalakshmi Episode Update 04.01.2022 : நிக்கிதா தற்கொலை கேசில் மீண்டும் விசாரணைக்கு போலீசார் அழைத்த நிலையில் பாக்கியா மற்றும் இனியாவை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார் கோபி. பள்ளியில் நுழைந்ததுமே பத்திரிக்கையாளர்கள் பாக்கியாவை சுற்றி வளைக்க போலீஸ் என்ன சொன்னாங்க நீங்க என்ன சொன்னீங்க என கேட்க நான் உண்மையை சொன்னேன் என கூறுகிறார். மேற்கொண்டு பாக்கியா பேச முயற்சி செய்தபோது கோபி வந்து போதும் என அவரை அழைத்துச் சென்று விடுகிறார்.

இனியாவை விசாரணைக்கு அழைத்த போலீஸ்.. பள்ளியில் கோபிக்கு போலீஸ் கொடுத்த பதிலால் அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

மற்ற குழந்தைகளின் பெற்றோர் உங்களுக்கு எதுக்கு இந்த வேலை இப்போ எங்க பொண்ணை எல்லாம் விசாரிக்கிறார்கள் என பாக்கியாவிடம் சத்தம் போட்டுச் செல்கின்றனர். பிறகு கோபி பாக்கியாவை உனக்கு இதெல்லாம் தேவையா?? இந்த பிரச்சனை இதோடு நிக்க போறது இல்ல, இன்னும் பெருசா தான் ஆகும் என திட்டுகிறார்.

பிறகு போலீஸ் பாக்கியாவை அழைத்து விசாரணை செய்கிறது. அதன் பிறகு இனியாவை அழைத்து அவருடன் கோபியும் உள்ளே செல்கிறார். பிறகு இனியாவிடம் விசாரணை செய்துவிட்டு ஒரு பேப்பரில் கையெழுத்து வாங்குகின்றனர். என் பொண்ணோட பேரு பத்திரிக்கை எல்லாம் வெளிய வராது இல்லை என போலீசாரிடம் கோபி கேட்கிறார். அடுக்கடுக்கான கேள்விகளால் போலீசார் உங்க மனைவியே தைரியமா இருக்காங்க நீங்க ஏன் இப்படி பயப்படுறீங்க என கூறுகிறார்.

இனியாவை விசாரணைக்கு அழைத்த போலீஸ்.. பள்ளியில் கோபிக்கு போலீஸ் கொடுத்த பதிலால் அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

இந்த பக்கம் ஈஸ்வரி பாக்யாவுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என நீட்டிக் கொண்டிருக்க அவருடன் சேர்ந்து செழியனும் அம்மா ஏன் இப்படி செய்கிறார்கள் தெரியல என திட்டுகிறார். காரில் வந்து கொண்டிருக்கும்போது இனியாவுக்கு நிக்கிதா கண்முழித்து விட்டதாக போன் வருகிறது.

பிறகு மூவரும் ஹாஸ்பிடலுக்கு செல்கின்றனர். அங்கு நிகிதாவின் நிலைமையை பார்த்த கோபி பாவம் அந்தப் பொண்ணு பார்க்கும் போது ரொம்ப கொடுமையா இருக்கு. உங்க பொண்ணுக்கு இந்த மாதிரி நலமா வந்ததாக நினைத்து பார்க்கும்போதே நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு என கூறுகிறார். எனக்கும் அப்படித் தாங்க இருந்துச்சு அதனால தான் கம்ப்ளைன்ட் கொடுத்தேன் என பாக்கியா கூறுகிறார். இங்க இருக்கிற பொண்ணுங்களை பார்க்கும்போது நம்ம பொண்ணு மாதிரியே இருக்குல என பாக்கியா சொல்கிறார்.

பிறகு நிக்கிதா கண் திறந்த பிறகு அவரது தோழிகள் கம்ப்யூட்டர் சார் மேல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டாங்க இந்த ஆண்டி தான் கொடுத்தாங்க என பாக்கியாவை கை காட்டுகின்றனர். நிகிதா கையெடுத்து கும்பிட வாழ்க்கையா ஐயோ என்னம்மா இதெல்லாம் என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.