கோபியால் செம கடுப்பாகி உள்ளார் ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா மூன்று வேளையில் சாப்பாடு விற்கலாம் என முடிவு செய்து தயார் செய்து சாப்பாடுகள் விற்காமல் அப்படியே இருக்க கூட வேலை செய்பவர்கள் இவ்வளவு சாப்பாடு வைக்காம நின்னுடுச்சு என்ன செய்வது என சொல்ல பாக்கியா அதை எல்லாம் எடுத்துக்கிட்டு நீங்க வீட்டுக்கு போங்க என அனுப்பி வைக்கிறார்.

பாக்யா செய்த வேலை.. கோபியால் கடுப்பான ராதிகா - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

அடுத்து செல்வி இது நமக்கு சரியா வருமா என கேட்க பாக்கியா ஒரே நாள்ல எப்படி சொல்றது ஒரு ரெண்டு நாள் போகட்டும் அப்புறம் முடிவெடுக்கலாம் என கூறுகிறார். உன்கிட்ட ஒன்னு கேட்கணும் என சொல்லி செல்வி எழில் தம்பி அமிர்தாவை லவ் பண்ணுதா என கேட்க பாக்கியா உனக்கு எப்படி தெரியும் என கூறுகிறார். உனக்கு ஓகேவா என கேட்க அவன் லவ் பண்றான் நான் என்ன சொல்ல முடியும் என கூறுகிறார். ஆனா உன் மாமியாக்காரி இதுக்கு ஒத்துக்கவே ஒத்துக்காது கண்டிப்பா வீட்ல பெரிய பிரச்சனை வரும் என கூறுகிறார்.

அதன் பிறகு வீட்டுக்கு வந்ததும் பைக்கில் இருந்து இறங்கும்போது இனிய அப்பா உடன் காரில் வந்து இறங்க பாக்யா அவளிடம் சைவையில் பேசுகிறார். பின்னர் சிக்கன் குழம்பு சமைத்து இனியாவுக்காக லெட்டர் ஒன்றை எழுதி அதை தன்னுடைய மாமனாரிடம் கொடுத்து அனுப்புகிறார்.

பாக்யா செய்த வேலை.. கோபியால் கடுப்பான ராதிகா - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

ராமமூர்த்தி சிக்கன் குழம்பு எடுத்து வந்து ராதிகா வீட்டில் வைத்து மயூ சிக்கன் குழம்பு சாப்பிடலாமா என சொல்லி கை, கால் கழுவ செல்ல ராதிகா மேடம் தாத்தா வாங்கி வந்ததாக சொல்ல கடையில் இருந்து வாங்கி வந்ததாக நினைத்து ராதிகா எல்லோருக்கும் பரிமாறுகிறார். ராமமூர்த்தி எதுவும் சொல்லாமல் அமைதியாக சாப்பிட கோபி சிக்கன் குழம்பையும் சப்பாத்தியையும் சாப்பிட்டு விட்டு சிக்கன் கிரேவி அல்டிமேட் செமையா இருக்கு நீ தானே செஞ்ச எனக்கே நான் செய்யல அப்பதான் வாங்கிட்டு வந்தாரு என சொல்ல சூப்பரா இருக்கு என ரசித்து ருசித்து சாப்பிடுகிறார்.

இனியா மெதுவாக தாத்தாவிடம் இது அம்மா செஞ்சது தானே என கேட்க அவர் ஆமாம் என சொல்ல இனியா சந்தோஷமாக சாப்பிடுகிறார். பிறகு சிக்கன் குழம்பு அது எப்படி நல்லா இல்லாம போகும் என் மருமக சமைச்சது என சொல்ல கோபி அதிர்ச்சியடைகிறார். ராதிகா இது முன்னாடியே சொல்ல மாட்டீங்களா என சொல்ல நான் கை கால் கழுவிட்டு வரதுக்குள்ள நீ எல்லாருக்கும் பரிமாறிட்ட நான் வந்து தட்ட புடுங்கவா முடியும் என பதிலடி கொடுக்கிறார்.

பாக்யா செய்த வேலை.. கோபியால் கடுப்பான ராதிகா - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

பாக்கியாவின் சமையலை கோபி ஆஹா ஓஹோ எனப் பாராட்டியதால் ராதிகா கடுப்பாகி உள்ளே கோபமாக சென்று விட கோபி செத்த இன்னிக்கி என புலம்பி கொண்டு சமாதானம் செய்ய உள்ளே செல்கிறார். நான் அப்பா வாங்கிட்டு வந்தது நினைச்சு தான் அதை நல்லா இருக்குன்னு சொன்னேன் நல்லாவே இல்ல கன்றாவியா இருந்தது காட் ப்ராமிஸ் என பேச ராதிகா அது நல்லா தான் இருந்தது கோபி என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.