கோபி குட்டையை குழப்பி விட இனியா வீட்டில் பொய் சொல்லி உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பிரின்ஸ்பல் டிஸ்மிஸ் செய்ய போவதாக சொன்னதால் இனியாவும் அவரது தோழிகளும் என்ன செய்வது என வருத்தத்தில் இருக்க கோபி இனியாவுக்கு போன் செய்து ஆறுதல் சொல்கிறார். காலேஜ்ல நடந்த விஷயம் எதுவும் தெரியாதுல என்று கேட்க இனியா காலேஜில் நடந்ததை சொல்ல பிரின்ஸ்பல் இடம் நான் வந்து பேசுறேன். நீ ஒன்னும் கவலைப்படாதே. எதுவாக இருந்தாலும் உடனே டாடிக்கு போன் பண்ணு என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.
இன்னொரு பக்கம் பழனிச்சாமி நடந்த விஷயம் தெரிஞ்சு பாக்கியாவை பார்க்க வந்து எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம்ன்னு பழிய உங்க மேல தூக்கி போட்டுக்காதீங்க என்று ஆறுதல் சொல்ல பாக்யா அத்தையும் மாமாவும் எனக்கு பெரிய சப்போர்ட்டா இருக்காங்க என்று சொல்கிறார்.
அதன் பிறகு பாக்யாவுக்கு ஒரு மெசேஜ் வர இனியா காலேஜிலிருந்து மெசேஜ் வந்திருக்கு நாளைக்கு வந்து பிரின்சிபாலை பார்க்க சொல்லி இருக்காங்க என்று மெசேஜ் படிக்கிறார். ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி இனியா காலேஜுக்கு வந்து காத்திருந்து அவரை அழைத்து வருகின்றனர்.
கால் வலியையும் பொருட்படுத்தாமல் தனக்காக வந்த தாத்தா பாட்டி வந்திருப்பதை பார்த்து இனியா குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார். ஈஸ்வரி காலேஜில் நேத்து நடந்தது பத்தி ஏதாவது கேட்டார்களா என்று கேட்க ராமமூர்த்தி அதைப்பற்றி திரும்ப திரும்ப பேச வேண்டாம் என்று சொல்கிறார்.
அடுத்ததாக எல்லோரும் சாப்பிடும் போது ஈஸ்வரி மீண்டும் குழந்தை புராணத்தை ஆரம்பிக்க எழில் வாழ்க்கையில செட்டிலான பிறகு தான் குழந்தையை பெத்துக்குவேன் என்று சொல்ல குழந்தை பெத்துக்கிறது தானே செட்டில் ஆகிறது என்று ஈஸ்வரி திட்டுகிறார். இப்படியே பேச்சு நீண்டு கொண்டே போக அமிர்தா வருத்தப்பட ராமமூர்த்தி ஈஸ்வரியை திட்டி அமைதியாக்குகிறார்.
அடுத்து இனியாவிடம் காலேஜ்ல என்ன சொன்னாங்க என்று கேட்க எதுவும் சொல்லல என்று சமாளிக்கிறார். போலீஸ் எப்படியும் தகவல் கொடுத்து இருப்பாங்க ஒன்னுமே சொல்லலையா என்று கேட்க இனியா பொதுவா காலேஜ்ல இப்படி ஒரு விஷயம் நடந்திருக்குன்னு சொன்னாங்க யார் பேரையும் குறிப்பிட்டு எதுவும் சொல்லல என்று சமாளிக்க பாக்கியாவுக்கு இனிய மீது சந்தேகம் வருகிறது. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.