எழில் கொடுத்த அதிர்ச்சியால் ஈஸ்வரியிடம் உண்மையை உடைத்துள்ளார் வர்ஷினி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபியின் அப்பா வீட்டுக்கு வந்திருக்க பாக்யா காபி கொடுத்து இனியா பற்றி விசாரிக்க மார்க் ரொம்ப கம்மியா எடுத்த விஷயத்தை சொல்ல ஏன் அவ இப்படி பண்ற படிக்க வேண்டியது தானே என வருத்தப்படுகிறார். அடுத்து கேட்டரிங் ஆர்டர் கிடைக்காததால் சமைக்கும் இடத்திலேயே சாப்பாடு கொஞ்சம் அதிகமாக செய்து விற்கப்பாவதாக சொல்ல அவர் நல்ல ஐடியா நீ செய் என சொல்ல ஈஸ்வரி எனக்கு என்னவோ சரியா வரும்னு தோணல என கூறுகிறார்.

எழில் கொடுத்த அதிர்ச்சி.. ஈஸ்வரிடம் உண்மையை உடைத்த வர்ஷினி, ஜெனிக்கு வந்த சந்தேகம் - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

அடுத்து எழில் ஆபீசுக்கு வர வர்ஷினி வந்து இரண்டு நாளா எங்க போய்ட்டீங்க என்ன பேச அப்போது நீங்க அமிர்தா போய் பார்த்தீர்களா என கேட்க நான் எதுக்கு அவள போய் பார்க்கணும் என்று வர்ஷினி சொல்லிக் கொண்டிருக்க எழில் கோபப்படுகிறார். நீங்க போய் அமிர்தாவை பார்த்து இருக்கீங்க எனக்கும் உங்களுக்கும் தான் கல்யாணம் நடக்கும்னு சொல்லி இருக்கீங்க அந்த குடும்பத்தோட நம்பிக்கையை உடைத்து இருக்கீங்க என எல்லா விஷயத்தையும் சொல்லவும் உங்களுக்கு தெரிந்து விட்டதா என வர்ஷினி கேட்க நான் அமிர்தாவை தான் பார்க்க போயிருந்தேன் என்ற உண்மையை சொல்ல அதிர்ச்சி அடைகிறார்.

அதன் பிறகு நீங்க நினைக்கிற மாதிரி உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்காது நான் அமிர்தாவை தான் கல்யாணம் பண்ணிக்குவேன். இதற்கிடையில ஏதாவது நாடகம் மாடிக்கிட்டு இருந்தீங்க நடக்கிறது வேற என சத்தம் போட அப்போது வர்ஷினியின் அப்பா உள்ளே வந்து நீ யார் கிட்ட பேசிட்டு இருக்கனு தெரியுமா என கோபப்பட வர்ஷினி இது நாங்களே பேசி தீத்துக்கிறோம் நீங்க வாங்க என கூட்டிச் செல்கிறார்.

எழில் கொடுத்த அதிர்ச்சி.. ஈஸ்வரிடம் உண்மையை உடைத்த வர்ஷினி, ஜெனிக்கு வந்த சந்தேகம் - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

அடுத்து பாக்கியா சமைக்கும் இடத்தில் சாப்பாடு அதிகம் செய்து விற்பனை செய்ய தயாராக வைத்திருக்க யாரும் வராமல் இருக்க கடைசியாக ஒருவர் மட்டும் வந்து 4 சாம்பார் சாதம் வாங்கி செல்கிறார்.

மறுபக்கம் வர்ஷினி வீட்டுக்கு வந்து ஈஸ்வரியிடம் எழில் அமிர்தாவை பார்க்க போன விஷயத்தையும் தன்னிடம் கோபமாக பேசியதையும் கூறுகிறார். மேலும் அவர் நான் அமிர்தாவை தான் கல்யாணம் பண்ணிப்பேன் உறுதியாக சொல்கிறார் என சொல்ல அவ சொன்னா மட்டும் போதுமா? என செழியன் சொல்ல ஈஸ்வரி அப்படி சொல்லு என கூறுகிறார். அந்த அமைதிக்காக கல்யாணம் பண்ண நான் விடமாட்டேன். நான் உனக்கு வாக்கு கொடுத்து இருக்கேன், உனக்கும் எழிலுக்கும் தான் கல்யாணம் நடக்கும் என சொல்ல அப்போது ஜெனி வர உடனே பேச்சை நிறுத்தி ஈஸ்வரி வர்ஷினியை உள்ளே கூட்டிச் சென்று விடுகிறார்.

எழில் கொடுத்த அதிர்ச்சி.. ஈஸ்வரிடம் உண்மையை உடைத்த வர்ஷினி, ஜெனிக்கு வந்த சந்தேகம் - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

என்னமோ ரகசியம் பேசறீங்க வர்ஷினி எதுக்கு அடிக்கடி இங்கு வர என்ன ஜெனி செழியனிடம் கேட்க சமாளிக்க முயற்சி செய்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.