தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி பாக்கியாவிடம் நீ ரொம்ப ஓவரா பேசுற என்று சொல்லிவிட்டு இனியாவை தன்னுடன் அழைக்க இனியா நான் வரல என்று சொல்கிறார்.
டாடி நல்லா பாத்துக்குவேன் என்று கூப்பிட இனியா நான் அம்மா கூடவே இருக்கேன் என்று அதிர்ச்சி கொடுக்க கோபி அவனப்பட்டு வெளியே வருகிறார். வீட்டுக்கு வந்த கோபி ராதிகாவிடம் நடந்த விஷயத்தை சொல்ல ராதிகா பதிலுக்கு அவரை திட்டி விடுகிறார்.
அடுத்ததாக காலேஜ் வந்த இனியா மற்றும் அவளது கேங்கை பிரின்ஸ்பல் உள்ளே கூப்பிட்டு இனிமே உங்களுக்கு இந்த காலேஜ்ல இடம் கிடையாது நாளைக்கு உங்க பேரண்டஸ் உடன் வந்து டிசி வாங்கிக்கோங்க அதுவரைக்கும் கிளாசுக்கு போகக்கூடாது என்று அதிர்ச்சி கொடுக்க இனியா கலங்கி நிற்கிறார்.
பிறகு ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி பாக்யாவை கூப்பிட்டு ஆறுதல் சொல்லி இனியாவை நாங்க பார்த்துக்கிறோம் என்று சொல்கின்றனர். பிறகு தினமும் இனியாவை காலேஜ் கொண்டு போய்விட்டு மறுபடியும் வீட்டிற்கு அழைத்து வர முடிவெடுக்கின்றனர். ஈஸ்வரி இன்னைக்கே அதை ஆரம்பித்து விடலாம் என்று சொல்ல ராமமூர்த்தி சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.