சரணை மிரட்டிய ராதிகாவுக்கு இனியா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியா பழனிச்சாமியிடம் ராதிகா தன்னுடைய முன்னாள் கணவரின் இன்னாள் மனைவி என்ற உண்மையை சொல்ல அவர் உங்க வாழ்க்கைக்குள் இவ்வளவு பிரச்சனையா என ஆறுதல் கூறுகிறார்.

மேலும் எப்பவும் நாம தோத்து போகணும்னு நினைக்கிறவங்க முன்னாடி ஜெயிச்சு காட்டணும் உங்களுக்கு கேக் எப்படி செய்யணும்னு நான் சொல்லி தரேன் என தன்னம்பிக்கை ஊட்டுகிறார். அதன் பிறகு பாக்யாவுக்கு பழனிச்சாமி வீடியோ கால் மூலமாக கேக் செய்து கொடுக்க மறுநாள் பாக்கியா அந்த கேக்கை அவரிடம் கொடுக்க டேஸ்ட் எல்லாம் சூப்பர் ஆனா கொஞ்ச நேரம் அதிகமா வேக விட்டுட்டு இருக்கீங்க அதனால கொஞ்சம் ட்ரையா இருக்கு என சொல்கிறார்.

முதல் முறை என்பதால் இந்த மாதிரி தவறு சகஜம் தான் நீங்க சீக்கிரம் சூப்பரா செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள் என சொல்கிறார். அடுத்து அமிர்தா கிச்சனில் தனியாக இருக்க அங்கு வரும் எழில் அவரோடு ரொமான்ஸ் செய்கிறார்.

பிறகு இனியா சரணுடன் பேசிக்கொண்டு ரோட்டில் நடந்து வர அதை காரில் வரும் ராதிகா பார்த்து விடுகிறார். இனியா கார்ல ஏறு போகலாம் என சொல்ல அப்போ சைக்கிள் என கேட்க அதை அப்புறம் எடுத்துக்கலாம் என கூறுகிறார் ராதிகா. இல்ல வீடு பக்கம் தானே நான் சைக்கிள்லயே வந்து விடுகிறேன் என இனியா சொல்கிறார்.

பிறகு ராதிகா சரணை பார்த்து என்னடா எப்ப பார்த்தாலும் இந்த பொண்ணு கூடவே தான் சுத்திக்கிட்டு இருப்பியா என சத்தம் போட இதனால் கோபமாகும் இனியா இப்ப எதுக்கு அவனை திட்டுகிறீர்கள்? எனக்கு வீட்டுக்கு வர தெரியும் என சரணை அழைத்துக் கொண்டு இனியா அங்கிருந்து நகர ராதிகா கடுப்பாகிறார்.

அடுத்து சரண் இவங்களுக்கு என்னை பிடிக்கவே மாட்டேங்குது, வீட்லயும் இப்படி தானா என கேட்க ஆமாம் ஒன்னு திட்டிக்கிட்டே இருப்பாங்க இல்லனா முகத்தை இப்படித்தான் வச்சுக்கிட்டு இருப்பாங்க என்னுடைய டாடிக்காக மட்டும் தான் இங்கே இருக்கேன் என சொல்கிறார்.

பிறகு சரண் இனியாவை வீட்டுக்கு கூப்பிட சீக்கிரம் வரேன் என சொல்லி இருவரும் பேசிக்கொண்டு நடந்து செல்கின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.