காலில் விழுந்த ஈஸ்வரியால் கல்யாணத்துக்கு சம்மதித்துள்ளார் எழில்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா செல்வியிடம் பக்கத்திலேயே வாடகைக்கு வீடு ஒன்றை பார்க்க சொல்ல அப்போது செல்வி இந்த நேரத்துக்கு வேற வீடா இருந்தா பிள்ளைங்க குடும்பத்தை பார்க்க ஆரம்பிச்சிருப்பாங்க என சொல்ல பாக்கியா எழில் பாவம் அவன் படம் பண்ணனும் என கூறுகிறார். இதையெல்லாம் கேட்ட எழில் வருத்தத்தோடு இருக்கிறார்.

அதன் பிறகு ராமமூர்த்தி வீட்டுக்கு வர ஈஸ்வரி கோபி கிட்ட சண்டை போட்டிங்களா? வீட்டை காலி பண்ண சொல்லுவானா என கேட்க அவர் கண்டிப்பா சொல்லுவான் என சொல்கிறார். இதுக்கெல்லாம் ஒரே ஒரு தீர்வு எனில் வர்ஷினிய கல்யாணம் பண்ணிக்கிறது தான் என சொல்ல அவனுக்குத்தான் அந்த பொண்ண புடிக்கலையே என ராமமூர்த்தி கூறுகிறார்.

அவனுக்கு அந்த பொண்ணு பிடிக்கலைன்னு எல்லாம் இல்ல அந்த அமிர்தாவை பிடிச்சிருக்கு, இப்படியே விட்டா ஒரு நாள் அவன் அமுதாவை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துடுவேன் அதோட நான் உயிரோடவே இருக்க மாட்டேன் என சொல்கிறார். மேலும் அப்படி ஒரு விஷயம் நடக்கவே கூடாது என ஈஸ்வரி சொல்லி அழ எழிலை கூப்பிடுகிறார் ராமமூர்த்தி.

தாத்தா எழிலிடம் வீட்டுப் பிரச்சினை பற்றி பேச எழில் இதுக்கு எல்லாத்துக்கும் நான் தான் காரணம் இத முடிச்சு வைக்கவும் முயற்சி பண்ணேன் ஆனா முடியல என்னென்னமோ நடக்குது என எழில் அழ ஈஸ்வரி இது எல்லாத்துக்கும் தீர்வு இருக்குன்னு தெரிஞ்சும் அதனை செய்ய மாட்டுற, வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்கோ என சொல்ல சத்தியமா என்னால அது மட்டும் முடியாது என எழில் சொல்ல உன் கால்ல கூட விழறேன், இந்தக் குடும்பம் உடைகிறது என்னால பார்க்க முடியாது அப்படி ஒரு நிலைமை வந்தால் கண்டிப்பா நான் உயிரோடு இருக்க மாட்டேன் என சொல்ல எழில் யாரும் கஷ்டப்பட வேண்டாம் உங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்யுங்க, நீங்க யாரை கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் பண்ணிக்கிறேன் என கூறுகிறார்.

இதனால் ஈஸ்வரி சந்தோஷப்பட எழில் கதறி அழ ராமமூர்த்தி நாங்க உன்னுடைய நல்லதுக்கு தான் சொல்லுவோம் இன்னைக்கு ஒரு நாள் அழுகிறது உன் வாழ்க்கை முழுக்க சிரிக்கிற மாதிரி பண்ணலாம் என சொல்கிறார். அடுத்து ஈஸ்வரி எல்லோரிடமும் இந்த விஷயத்தை சொல்லிடலாம் என அனைவரையும் கூப்பிட்டு நிற்க வைக்க மறுபக்கம் எழில் அமிர்தாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நினைத்து வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.