ராதிகா முன்பு கோபி திட்ட இனியா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா அமுதாவுக்கு ஆறுதல் சொல்லி போனை வைக்க அதன் பிறகு எழில் அங்கிருந்து கிளம்புகிறார்.

அடுத்ததாக ராதிகா வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது கோபி வர அப்போது மயூரா பிராக்ரஸ் ரிப்போர்ட் கொடுத்துட்டாங்க என சொல்லி ரேங்க் சீட்டை கொடுக்க எல்லாவற்றிலும் நல்ல மார்க் எடுத்து இருப்பதை பார்த்து பாராட்டுகிறார் கோபி. அடுத்து இனியாவிடம் உனக்கும் மார்க் வந்திருக்கும்ல என கேட்க தயக்கத்தோடு மார்க் சீட்டை கொடுக்க மார்க் எல்லாவற்றையும் கம்மியாக இருப்பதை பார்த்து கோபி ஷாக் ஆகிறார்.

ராதிகா முன்பு திட்டிய கோபி.. இனியா கொடுத்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்.

இதைப் பார்த்த கோபியில் தாத்தாவும் என் எல்லாத்திலேயும் மார்க் குறைந்தது என கேட்க இனியா எதையெதையோ சொல்லி சமாளிக்க கோபி இதையெல்லாம் ஏத்துக்க முடியாது நீ ஒழுங்கா படிக்கல இனி போனை எல்லாம் ஓரங்கட்டி வச்சிட்டு படிக்கிற வேலையை மட்டும் பாரு என திட்டுகிறார். என்ன நீங்க திட்டறீங்களா என்ன திட்டுனா நான் அந்த வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் என இனியா மிரட்டி விட்டு உள்ளே செல்ல ராதிகா அங்கத் திட்டனா இங்கே வரது, இங்க திட்டுனா அங்க போறது இதெல்லாம் ரொம்ப தப்பு. நீங்க கண்டிக்கிறதுல தப்பு கிடையாது என சொல்லிவிட்டு உள்ளே செல்ல தாத்தா ராதிகா இதை எல்லாம் சரியா தான் சொல்றா பரவால்ல புத்திசாலியா இருக்கா ஆனாலும் உன்னை எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு தான் தெரியல என கோபியை நக்கல் அடிக்கிறார்.

ராதிகா முன்பு திட்டிய கோபி.. இனியா கொடுத்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்.

மேலும் அந்த வீட்டில இருந்து மார்க் குறைந்து இருந்தா அதுக்கு காரணம் பாக்கிய தானே சொல்லுவ, அதே மாதிரி இங்கே இருக்கும்போது இனிமையாக நல்லபடியா பார்த்துக்கொள்ள வேண்டியது உன்னோட கடமை தான். அவருடைய இந்த நிலைமைக்கு நீயும் தான் காரணம் என எச்சரிக்கிறார்.

அடுத்து பாக்கியா கேன்டீன் ஆர்டர் கிடைக்காத காரணத்தினால் வாங்கிய பாத்திரங்களை வைத்து சமைத்து சமைக்கும் இடத்திலேயே விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதாக தன்னுடன் வேலை பார்க்கும் அனைவரிடமும் சொல்ல அவர்கள் அனைவரும் சரியென சம்மதம் தெரிவிக்கின்றனர்.

ராதிகா முன்பு திட்டிய கோபி.. இனியா கொடுத்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்.

அதன் பிறகு எழில் வீட்டுக்கு வர வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். பிறகு அவர்களை சமாளித்துவிட்டு பாக்கியவிடம் வர்ஷினி செய்த விஷயத்தைச் சொல்ல அதிர்ச்சி அடைகிறார். வர்ஷினி அமிர்தாவை பற்றி அத்தை கிட்ட ஏதாவது சொல்லி இருப்பாரோ என யோசிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.