கோபி பற்றி குடும்பத்தாருக்கு உண்மைகள் தெரிய வர ஈஸ்வரி அழுது புலம்புகிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட்டில் கோபி ராதிகா வீட்டுக்கு சென்று நீ மும்பைக்கு போக போறியா என கேட்க அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு உங்களால நாங்க ரொம்ப சந்தோஷமா இருந்துட்டோம் நீங்க கொடுத்த சந்தோஷமே போதும் என அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். இருவரின் சத்தமாக பேசிக் கொண்ட சத்தம் கேட்டு மயூரா வெளியே வர அவரை உள்ளே போகச் சொல்லி ராதிகா அதட்ட பிறகு கோபி வீட்டிலிருந்து வெளியே கிளம்பியது ராதிகாவின் அண்ணனும் அம்மாவும் அவரை திட்டித் தீர்க்கின்றனர்.

கோபி பற்றி குடும்பத்தாருக்கு தெரிய வந்த உண்மை.. அழுது புலம்பும் ஈஸ்வரி, எழில் எடுக்கும் முடிவு என்ன? பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா ராஜேஷ் கூப்பிட்டு மயூராவை கொடுத்து விடுவோம் அவ அங்கேயாவது போய் சந்தோஷமாக இருக்கட்டும் என கூறுகின்றனர். இந்த பக்கம் ஈஸ்வரி ராஜேஷ் பேசிய பேச்சை கேட்டு அழுது புலம்புகிறார். என்னதான் நடந்துச்சு சொல்லுங்க என்னமோ என்கிட்ட மறைக்கிறீங்க என கோபியின் அப்பாவிடம் கேட்க அவர் அமைதியாகவே இருக்கிறார்.

பிறகு எழில் வந்து பாட்டி விடுங்க தாத்தாவுக்கு இருக்கிற வலியும் வேதனையும் போதும் என சொல்லி அவரை உள்ளே அழைத்துச் செல்கிறார். உள்ளே சென்ற எழில் என்னதான் பண்றது எது நடக்கக்கூடாது என்று நினைக்கிறோமோ அது நடந்துச்சு. இனிமே கடவுள் விட்ட வழி எல்லாமே சரியாகற நேரத்துல இவன் வந்து எடுத்துட்டான் என தாத்தா சொல்ல இல்ல தாத்தா எதுவும் சரியாகல அவர் இன்னும் இருந்தல ராதிகாவை கல்யாணம் பண்ணிக்க போறதா போலீஸ் ஸ்டேஷனில் எழுதி கொடுத்து இருக்கிறார். அம்மாவை விவாகரத்து பண்ண போறதா சொல்லி இருக்கார் என சொல்லி வருத்தப்படுகிறார். மேலும் தாத்தா நல்லவேளை பாக்கியா இங்கே இல்லை என சொன்ன அம்மாவின் அப்பா மேல எப்பயோ சந்தேகம் வந்துடுச்சு. நாம வருத்தப்படக்கூடாது என்று எதுவும் பேசாமல் இருக்காங்க என கூறுகிறார்.

கோபி பற்றி குடும்பத்தாருக்கு தெரிய வந்த உண்மை.. அழுது புலம்பும் ஈஸ்வரி, எழில் எடுக்கும் முடிவு என்ன? பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் கோபி ராதிகா வீட்டை விட்டு வெளியே தொடக்கியதை நினைத்து காரில் புலம்பிக்கொண்டு வருகிறார். நீ இல்லாம என்னால வாழ முடியாது ராதிகா தயவு செய்து புரிந்துகொள் என புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.