அமிர்தாவை தேடி பிடித்த எழிலுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் அமிர்தாவை தேடி அலைய தன்னுடைய நண்பன் ஒருமுறை அவர்களை ஊரில் டிராப் செய்ததால் அவனுக்கு போன் போட்டு அட்ரஸ் கேட்க அவர் மரம் இருக்கும் சுத்தி வயல் இருக்கும் எல்லா வீடும் ஒரே மாதிரி இருக்கும் என சொல்ல எழில் சரி நான் பாத்துக்கிறேன் வை என போனை வைக்கிறார்.

அமிர்தாவை தேடி பிடித்த எழில்.. காத்திருந்த அதிர்ச்சி, பாக்கியா எடுத்த முடிவு - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்.!!

பிறகு ஒரு கோவில் அருகே வந்து பெண்மணி ஒருவரிடம் கேட்க அவர் இப்படித்தான் போகணும் என வழி சொல்லி அனுப்ப எழிலும் சதீஷும் அந்த இடத்திற்கு வந்து சேருகின்றனர். அப்போது சரியாக அமிர்தா வர எழில் அமிர்தாவை பார்த்து ஓடோடி சென்று அவரை பிடிக்கிறார். எழிலை பார்த்த அமிர்தா கண்ணீர் விட்டு அழுகிறார். உங்கள எங்கெல்லாம் தேடுறது உங்களைத் தேடிப் பிடிக்கிறதுக்குள்ள உயிரே போயிடும் போல என எழில் சொல்ல சாரி கேட்கிறார் அமிர்தா.

மறுபக்கம் பாக்கியா கேன்டீன் ஆர்டருக்காக வாங்கிய பாத்திரங்கள் எல்லாம் அப்படியே இருக்கு மாசா மாசம் லோன் வேற கட்டணும் எனக்கு ஒரு ஐடியா தோணுது அதை நான் சொல்றேன் சரியா வருமானு நீங்க சொல்லுங்க என ஜெனி மற்றும் செல்வியிடம் கூறுகிறார். அவர்களும் என்ன ஐடியா என கேட்க தினமும் டெலிவரி செய்வதற்காக சாப்பாடு செய்யுறோம் அதை இன்னும் கொஞ்சம் சேர்த்து செய்து நம்ம சமைக்கிற இடத்தில வச்சு விற்கலாமா என கேட்க ஜெனி நல்ல ஐடியா என கூறுகிறார். செல்வியும் நீ பண்ணுக்கா நான் உன்கூட இருக்கேன் என கூறுகிறார்.

அடுத்து எழில் அமிர்தாவிடம் ஏன் இப்படி வந்துட்டீங்க உங்களை பார்க்காமல் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? என சொல்ல எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம ஒரே குழப்பமா இருந்துச்சு, அதுவும் வர்ஷினி வந்துட்டு போனதும் என அமிர்தா வாய் தவறி உண்மையை உலர எழில் என்னாச்சு என கேட்க பிறகு அமிர்தா நடந்த விஷயங்களை கூறுகிறார்.

அமிர்தாவை தேடி பிடித்த எழில்.. காத்திருந்த அதிர்ச்சி, பாக்கியா எடுத்த முடிவு - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்.!!

இதனால் அதிர்ச்சி அடையும் எழில் நீங்க ஒரு வார்த்தை என்கிட்ட கேட்டு இருக்கலாம்ல என சொல்கிறார். நான் நீங்க நிலா பாப்பா எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறேன். என் மனசுல நீங்க மட்டும் தான் இருக்கீங்க. நீங்க இப்படி விட்டுட்டு வர்றதுனால நான் வேறு ஒருத்தரை கல்யாணம் பண்ணிப்பேன்னு மட்டும் நினைக்காதீங்க அது என்னைக்கும் நடக்காது என கூறுகிறார்.

அடுத்து பாக்கியா எழிலுக்கு போன் பண்ணு எடுத்துப் பேச அமிர்தாவை பார்த்தியா எப்படி இருக்கா நிலா பாப்பா எப்படி இருக்கு என நலம் விசாரிக்க இதைக் கேட்டு அமர்தா கண்ணீர் விடுகிறார். பிறகு பாக்கியா அமிர்தாவிடம் எழில் கொடுத்த வாக்கை என்னைக்கும் தவற மாட்டான். பிடிச்ச விஷயத்துக்காக சண்டை போடணும் இப்படி ஓடக்கூடாது. எழில் எனக்கு முன்ன பாதையில விட்டுட்டு போக மாட்டான் நா அவனை அப்படி வளர்க்கல என அமிர்தாவுக்கு ஆறுதல் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.