திரும்பத் திரும்ப அவமானப் பட்டுள்ளார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவுக்கு அட்மிஷன் முடிந்து கோபி பாக்கியா மற்றும் இனியா மூவரும் வெளிய வர இனிய அம்மாவிடம் எப்படி நான் இப்படி எல்லாம் என்று கேட்க என்னை பத்தி என்ன நெனச்ச என பாக்யா பில்டப் கொடுக்கிறார்.
பிறகு கோபி சரி ஏதாவது சாப்பிடறியா? இங்கே கேன்டீன்ல சாப்பாடு நல்லா இருக்கும் என்று இனியாவை கூப்பிட இனியா வேண்டாம் பசிக்கல என சொல்கிறார். இதை அடுத்து கோபி திரும்பவும் விஸ்காம் படிப்புல பெரிய ஃபியூச்சர் இல்லை, குழந்தை ஆசைப்பட்டானு சொல்லி எல்லாரும் சேர்த்து விட்டுருங்க நாளைக்கு நான்தான் சொன்னேன்னா நீங்க எடுத்து சொல்லி இருக்கலாம் இல்ல என்று அவர் கேட்கும் போது என்ன பதில் சொல்லப் போறீங்க என கேள்வி கேட்க பாக்க நான் ஒன்னும் விசாரிக்காமல் சேர்த்து விடல விஸ்காம் படிப்பிலும் நிறைய வாய்ப்புகள் இருக்கு என அந்த படிப்பு பற்றி எடுத்து சொல்ல கோபி மிரண்டு நிற்கிறார்.
அடுத்ததாக கோபி இனியவை கேண்டின் அழைத்துச் செல்ல பாக்யா காலேஜ் சுற்றி பார்க்க போய் ஒரு கிளாஸ் ரூமில் உட்கார்ந்து போர்டில் தன்னுடைய பெயரை எழுதிப் பார்த்து ரசிக்கிறார். அடுத்ததாக இனியாவிடம் காலேஜ் வந்தது பற்றி சொல்லி சந்தோஷப்படுகிறார்.
அதைத் தொடர்ந்து ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு வரும் பாக்கியா காலேஜ் நடந்த விஷயங்கள் பற்றி சொல்லி எனக்கு காலேஜ் போய் படிக்கணும்னு ஆசை ஆனால் அப்பா இறந்து போயிடுமே அதை படிக்க முடியல என்று வருத்தப்பட பழனிச்சாமி இப்பயும் படிக்கலாமே என்று சொல்கிறார்.
இந்த வயசுல எப்படி சார் முடியும் என பாக்கியா கேள்வி கேட்க 108 வயதில் ஒரு பாட்டி படித்து முதல் மதிப்பெண் வாங்கி இருக்கும் விஷயத்தை சொல்கிறார். அது மட்டுமல்லாமல் ஈவினிங் காலேஜ் குறித்து சொல்ல நீங்க சொல்றதும் யோசிக்கிற மாதிரி தான் இருக்கு நான் யோசிக்கிறேன் என பாக்கியா கூறுகிறார்.
அதற்கு அடுத்ததாக கேண்டீன் வந்த பாக்கியா செல்வியிடம் இனியாவை காலேஜ் சேர்த்தது பழனிச்சாமி சொன்ன ஐடியா இது எல்லாம் சொல்லி நானும் காலேஜ் போகட்டுமா நீ என்ன சொல்ற என கேட்க சும்மா காமெடி பண்ணிட்டு இருக்காத அக்கா என செல்வி பதில் கொடுக்கிறார். அன்னைக்கு ஏதோ சும்மா சொன்னேன் இருக்கிற வேலையில இதெல்லாம் உன்னால எங்க பண்ண முடியும் என கூறுகிறார்.
மறுபக்கம் வீட்டுக்கு சீக்கிரம் வரும் செழியன் ஜெனியின் பக்கத்தில் உட்கார்ந்து பேச அப்போது ஜெனி செழியனின் மாற்றம் சந்தோஷத்தை கொடுப்பதாக கூறுகிறார். மேலும் வளைகாப்பு பற்றி பேசும் போது வளைகாப்பு முடிந்ததும் அம்மா வீட்டுக்கு போயிடுவேன் என்று சொல்ல செழியன் அதெல்லாம் போகக்கூடாது நீங்கதான் இருக்கணும் என்று கோபித்துக் கொள்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.