கோபிக்கு ஆப்பு மேல் ஆப்பு வைத்துள்ளார் ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா வீட்டுக்கு வந்ததும் ராதிகா இவங்க எதுக்கு அங்க போகணும் என பிரச்சனையை தொடங்க கோபி ராதிகாவை அமைதியாக இருக்க சொல்ல நான் மட்டும்தான் அமைதியா இருக்கணும் அவங்கள எதுவும் சொல்ல மாட்டீங்க என திட்டி செல்கிறார்.

அடுத்து இனியா ஜாலியா சந்தோஷமா வந்தேன் மூட் அவுட் பண்ணிட்டீங்க போங்க டாடி என கோபப்பட்டு ரூமுக்குள் செல்ல ராமமூர்த்தி ச்சே வீடா இது என சலித்து கொள்கிறார். பிறகு கோபி மொட்டை மாடியில் சென்று யோசனையில் இருக்க அங்கு வரும் ராதிகா இனியா என்னை மதிக்கணும் உங்க அப்பா அம்மா என்னதான் மருமகள்னு சொல்லணும் அதுக்கு நீங்க ஏதாவது பண்ணியே ஆகணும் என சொல்ல கோபி நான் என்ன பண்ண முடியும் என கேட்க நீங்க பண்ணித்தான் ஆகணும் என ஆர்டர் போடுகிறார்.

வேறு வழி இல்லாமல் கோபி சரி பண்றேன் ஆனா எனக்கு கொஞ்சம் டைம் கொடு என சொல்ல ராதிகா அந்த வீட்ல இருந்தா கூட கொஞ்சம் நிம்மதியா இருந்திருப்பேன் இங்கு கூட்டிட்டு வந்து உங்க பேமிலியோட மிங்கிள் பண்ண வச்சு என் நிம்மதியே போச்சு. நீங்க உங்க அப்பா அம்மாவ என்ன மருமகளா சொல்ல வைக்க என்ன செய்ய போறீங்கன்னு யோசிங்க என சத்தம் போட்டு விட்டு செல்கிறார்.

கோபி ராதிகா, இனியா, ராமமூர்த்தி என எல்லோரும் சொன்னதை நினைத்து டென்ஷனில் மொட்டை மாடியில் உட்கார்ந்து சரக்கடித்து அங்கேயே படுத்து தூங்குகிறார். ராமமூர்த்தி திடீரென தூக்கத்திலிருந்து எழ கதவு திறந்து இருப்பதை பார்த்து கோபி எங்கே என தேடி மேலே செல்ல கோபி அங்கு குடித்துவிட்டு தூங்குவதைப் பார்த்து வருத்தப்பட்டு கீழே வந்து விடுகிறார்.

மறுநாள் காலையில் எழில் வாக்கிங் செல்ல கோபியும் வாக்கிங் வர கோபி எழிலிடம் வந்து யார் அவன்? அவன் எதுக்கு உங்க அம்மா கிட்ட நின்னு பேசிகிட்டு இருக்கான் என கோபப்படுகிறார். சூப்பர் மார்க்கெட் போறா, அவன் கூட பைக்ல போறா, வீட்டுக்கு வந்து வெளியில் நின்று பேசிக்கிட்டு இருக்கா இதெல்லாம் நீ என்னன்னு கேக்க மாட்டியா? அவளுக்கு அசிங்கமா இல்லையா என கேட்க நீங்க பண்ண துரோகத்தை விட எங்க அம்மா எங்களுக்கு எந்த துரோகமும் பண்ண மாட்டாங்க என எழில் கூறுகிறார்.

அது மட்டுமல்லாமல் எங்க அம்மாவுக்கு அவங்க லிமிட் என்ன என்பது நல்லாவே தெரியும் அவங்க பிரண்டுனு சொல்லித்தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க, உங்கள மாதிரி எங்க கிட்ட பொய் சொல்லிட்டு தப்பான உறவு வைத்துக் கொள்ளல என பதிலடி கொடுக்கிறார். மேலும் இன்னொன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க ஒரு வேலை எங்க அம்மாவுக்கு யாரையாவது புடிச்சி இருந்ததுனா அவங்களுக்கு நானே கல்யாணம் பண்ணி வைப்பேன். உங்களால 25 வருஷம் வாழ்க்கையே இழந்துட்டாங்க, இனியாவது அவங்க வாழ்க்கையில சந்தோஷமா இருக்கட்டுனு நானே கல்யாணம் பண்ணி வைப்பேன் என சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.

வாய கழுவுடா அசிங்கமா பேசாத, அசிங்கமே இல்லையா என கேட்க நீங்க பண்ணதை விட இது ஒன்றும் பெரிய அசிங்கம் இல்ல, அவங்க என்ன பண்றாங்க எங்க போறாங்கன்னு ஃபாலோ பண்ணி அதை என்கிட்ட வந்து பேசுறீங்க பாருங்க இதுதான் பெரிய அசிங்கம் என பதிலடி கொடுக்கிறார்.

அடுத்து பாக்கியா வீட்டில் அமிர்தாவின் அப்பா அம்மா ஊருக்கு கிளம்ப ஈஸ்வரி அம்மா எங்கே என கேட்க அவங்க ரூமில் இருக்காங்க கூப்பிடவா என பாக்யா சொல்கிறார். இல்ல நாங்களே பாத்து சொல்லிட்டு ஊருக்கு கிளம்பறோம் என சொல்லி எல்லோரும் ஈஸ்வரி ரூமுக்கு வர அங்கே ஈஸ்வரி நிலா பாப்பாவோட விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.