கோபியிடம் இனியா பற்றிய உண்மையை போட்டு உடைத்துள்ளார் பாக்கியா.

Baakiyalakshmi Episode Update 27.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பள்ளியில் இருந்து இனியா வீட்டுக்கு கிளம்பிய நிலையில் அவருடைய தோழி நிகிதா வீட்டுக்கு போக பிடிக்கவில்லை, இப்படியே எங்கேயாவது போய் விடுகிறேன் என கூறுகிறார். இனியா அவரை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார்.

அதன் பிறகு இனியா சோகத்துடன் வீட்டுக்கு வர அவரது தாத்தா பாட்டி என்ன ஏது என்று கேட்க ஒன்றுமில்லை என கூறுகிறார். பிறகு பாக்கியா கோபியிடம் இது பற்றி சொல்ல அவர் இனியாவை கூப்பிட்டு என்ன ஏது என கேட்கிறார். இனியா சொல்லலாமா வேண்டாமா என்ற சிந்தனையுடன் இருக்க இந்த நேரத்தில் போன் வர அவர் உள்ளே சென்று விடுகிறார்.

பிறகு அவரது தோழி சார் ரொம்ப திட்டுகிறார். எனக்கு செத்துடலாம் போல இருக்கு என கூறுகிறார். இனியா இப்படியெல்லாம் பேசாத என கூறுகிறார். ஆனால் அவரது தோழி போனை வைத்து விட்டு ஸ்விட்ச் ஆஃப் செய்து விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.