கோபியால் ராதிகா கடுப்பாகி உள்ளார்.

Baakiyalakshmi Episode Update 27.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. வீட்டில் அனைவருடன் அமர்ந்து கொண்டிருந்த கோபி மய்யூவிடம் பட்டாசு வாங்கி கொண்டு வருவதாக ப்ராமிஸ். செய்ததை நினைக்கிறார். உடனே ஆபீஸில் இருப்பவர்களுக்கு ஸ்வீட் கொடுக்க வேண்டும் பணம் கொடுக்க வேண்டும் என பணம் கொடுக்க வேண்டும் என சாக்குபோக்கு சொல்லி விட்டு ராதிகா வீட்டுக்கு கிளம்புகிறார். ஆனால் அவருடைய அப்பா இத்தனை மணி வரைக்கும் ஆபீஸ்ல எல்லாரும் வீட்டுக்கு போகாம தீபாவளி கொண்டாடாமல் வேலை பண்ணிட்டு இருக்காங்களா.? என கேட்கிறார்.

மனிதரின் இயல்பை புரிந்து கொள்.!

கோபியால் கடுப்பாகும் ராதிகா.. வீட்டை ஏமாற்றி கோபி செய்த வேலை - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

ஆபீஸ்ல அக்கவுண்ட் மற்றும் இன்னொருவர் இருக்கிறார். அவர்களிடம் கொடுத்தால் அவர்கள் வீடு வீடாகச் சென்று டெலிவரி செய்து விடுவார்கள் என கூறியுள்ளார். உடனே ஈஸ்வரி ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க நீ போய்ட்டு வா கோபி என அனுப்பி வைக்கிறார்.

இந்தப் பக்கம் மய்யூ கோபிக்காக காத்துக் கொண்டிருப்பதை பார்த்து அவருடைய பாட்டி ராதிகாவை திட்டுகிறார். நீ எப்படி நான் கெட்டுப் போ மய்யூவையும் சேர்த்து கெடுத்துடாத என கூறுகிறார். இதனால் ராதிகா கடுப்பாகி மய்யூ வா பூ மத்தாப்பு கொளுத்தலாம். இல்லனா உள்ள போ என திட்டுகிறார். ஆனால் மய்யூ கோபி அங்கிள் வரட்டும் நான் இன்னைக்கு பெரிய பட்டாசு வெடித்து ஆகணும் என அடம்பிடிக்கிறார். ராதிகாவின் அம்மா எனக்கு ட்ரெயின் டிக்கெட் போட்டு இந்தக் கருமத்தை எல்லாம் என்னால் பார்த்துட்டு இருக்க முடியாது என கூறுகிறார்.

Jai Bhim -க்கு அடுத்து இந்த படம் தான் – Maanaadu DAY 2 Public Review | Simbu | STR | SJ Suriya

கோபியால் கடுப்பாகும் ராதிகா.. வீட்டை ஏமாற்றி கோபி செய்த வேலை - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

மயூவால் கடுப்பான ராதிகா அவரை அடிக்க பாய்கிறார். இந்த நேரத்தில் கோபி வந்து ராதிகாவை தடுத்து நிறுத்துகிறார். பிறகு ஐயோ நான் உங்களுக்காக காத்திருந்தேன் அதுக்காக அம்மா திட்டுறாங்ங என கூறுகிறார். அதை பின்னர் கோபி உனக்காக பட்டாசு வாங்கிட்டு வந்திருக்கேன் வெடிக்கலாம் என கூட்டிக் கொண்டு சென்று பட்டாசு வெடிக்கிறார். இதனை பார்த்து ராதிகாவின் அம்மா சந்தோஷப்படுகிறார்.

பிறகு அனைவரும் ஸ்னாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ராதிகா டீச்சர் செஞ்சது சாப்பிட்டு பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க என கூறுகிறார். இந்த தீபாவளித் ஸ்வீட்டை நானே செய்து இருப்பேன். அது கூட செய்யாமல் நான் எதுக்கு இங்க இருக்கணும் என கூறுகிறார். இதுதான் வாய்ப்பு என கோபியும் அவருக்கு ஆதரவாகப் பேசி பாக்யா ராதிகாவின் உறவை துண்டிக்க முயற்சி செய்கிறார். சாப்பாடு கூட நல்லா இல்லை என சொல்ல அதான் அம்மா இருக்காங்களே அவங்க சமைக்க ஆசைப்பட்டா அவங்கள விட்டு விடு. இந்த டீச்சர் கிட்ட ஆடர் கொடுப்பதை நிறுத்திவிடு என கூறுகிறார். ராதிகாவும் சரி பார்க்கலாம் என சொல்கிறார்.

பிறகு மய்யூ அப்படியே தூங்கிவிட 11 மணி வரை கோபி அங்கேயே இருக்கிறார். ராதிகா நேரம் ஆயிடுச்சு வீட்டுக்கு கிளம்பலையா கோபி என கேட்கிறார். மயூ தூங்கி விடவே அவளை டிஸ்டர்ப் பண்ணல என சொல்கிறார். நாளைக்கு உங்க வீட்டோட தீபாவளி கொண்டாடுங்கள் என ராதிகா கூற அங்கே எப்படி கொண்டாட முடியும் நான் இங்கதான் வருவேன் என சொல்கிறார். இதுதான் என் வீடு என கூறுகிறார்.

இதனையடுத்து கோபி வீட்டிற்கு கிளம்பி விடுகிறார். மறுநாள் காலையில் எல்லோரும் சாப்பிட அமர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் கோபி பாக்கியா எடுத்துக் கொடுத்த சட்டையை அணிந்து கொண்டு வருகிறார். உடனே பாக்கியா அதனை கண்டு மகிழ்ச்சி அடைகிறார். அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் கோபி மட்டும் எப்படி இங்கிருந்து ராதிகா வீட்டிற்கு கிளம்புவது என திட்டம் போடுகிறார். இனியா வேற இன்னைக்கு நீங்க நாள் முழுக்க என் கூடத்தான் இருக்கணும் என கூறுகிறார்.

உடனே கோபி ஒரு நிமிஷம் என எழுந்து சென்று தனது ஆபிசில் வேலை செய்யும் சுரேஷ்க்கு போன் செய்து என் வீட்டுக்கு வந்து ஆபீசில் வேலை இருக்கு என்று சொல்லி என்னை அழைத்துக்கொண்டு போ என கூறுகிறார். சுரேஷ் தயங்க நான் சொன்னதை மட்டும் செய் என கூறிவிட்டு போனை வைத்து விடுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.