ராதிகாவுக்கு சப்போர்ட் செய்து பேசியுள்ளார் பாக்கியா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா ஹாலில் சோகமாக உட்கார்ந்திருக்க ஜெனி ரூமில் இருந்து எழுந்து வெளியே வரும் இனியா பாக்யாவின் மடியில் படுத்து நீ ரொம்ப பாவம், நீ ரொம்ப நல்ல அம்மா.. என வருத்தப்பட பாக்கியா இதை பத்தி எல்லாம் நீ கவலைப்படாம நல்லா படிச்சு வாழ்க்கையில் பெரிய இடத்துக்கு வரணும் என ஆறுதல் கூறுகிறார்.

மறுநாள் காலையில் பாக்யா எல்லோருக்கும் காபி கொடுக்க அனைவரும் காப்பி சூப்பர் என பாராட்ட அந்த நேரம் வீட்டுக்கு வரும் கோபி காபி வாசணை பிடித்து தனக்கும் காபி கிடைக்காதா என ஏக்கமாக பார்க்கிறார்.

அடுத்து இனியா டைனிங் டேபிளில் உட்கார்ந்து போனில் சாட் செய்து சிரித்துக் கொண்டிருக்க அப்போது பாக்கியா பால் கொடுத்துவிட்டு ரொம்ப நேரமா யாருக்கு மெசேஜ் பண்ணிக்கிட்டு இருக்க என கேட்க இனியா சரண் தான், டியூஷன் வரலையான்னு கேட்கிறான். நான்தான் போக வேணாம்னு இருக்கேன் என சொல்ல ஏன் போக வேண்டியது தானே என பாக்கியா மற்றும் எழில் இருவரும் சொல்கின்றனர்.

இன்னைக்கு வரலனு சொல்லிட்டேன். அதான் பக்கத்தில் இருக்க ஸ்னாக்ஸ் கடைக்காவது வர சொல்கிறான் என சொல்ல அங்கலாம் எதுக்கு போகணும் டியூஷன் போ அங்க பேசு வேணும்னா வீட்டுக்கு கூட்டிட்டு வா அதை விட்டுட்டு வெளியே எல்லாம் போகாத என பாக்கியா சொல்ல என்னம்மா ராதிகாவும் அப்படித்தான் சொன்னாங்க நீயும் இப்படி சொல்ற என சொல்ல அவங்க இப்படி சொல்லி இருந்தா அது சரிதான் என பாக்கியா ராதிகாவுக்கு சப்போர்ட் செய்ய இனியா ஷாக் ஆகிறார்.

பிறகு பாக்கியா ஆபீசுக்கு கிளம்பி தயாராக இருக்க ஈஸ்வரி வேலை முடிந்ததும் நேரா வீட்டுக்கு தான வருவ என கேட்க இந்த வீட்டை விட்டு விட்டுப் போக எவ்வளவு சந்தர்ப்பம் அமைந்தது. ஆனால் அப்போதெல்லாம் போகாத நான் எனக்கு இப்போது சந்தோஷம் தர நிறைய விஷயங்கள் இருக்கும்போது எங்க போய்ட போறேன்? எங்கேயும் போகமாட்டேன் அத்தை என சொல்லி கேன்டீன் கிளம்புகிறார்.

பிறகு கோபி ரூமில் தூங்கிக் கொண்டிருக்கும் ராதிகாவை எழுப்ப முடியாமல் காபிக்காக புலம்பிக் கொண்டிருக்க பிறகு ஒன்பதரை மணிக்கு ராதிகா எழுந்து குளித்து தயாராகி விட்டு கோபியிடம் பேச அவர் காபி குடிக்கணும் போல இருக்கு நான் ஆர்டர் பண்ணவா என கேட்க இதெல்லாம் எதுக்கு ஆர்டர் பண்றீங்க நான் போய் போட்டுட்டு வருகிறேன் என்று சொல்ல கோபி வேண்டாம் அதனால ஏதாவது பிரச்சனை வரப்போகுது என பயப்படுகிறார்.

இந்த வீட்ல தான் இருக்க போறோம்னு முடிவு பண்ணியாச்சு, என்ன நடந்தாலும் சமாளிச்சு தானே ஆகணும் என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.