சாபமிட்ட ராமமூர்த்திக்கு கோபி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி இப்போ உனக்கு சந்தோஷமா? என திட்டி தீர்க்கிறார். பிறகு ஜெனி அங்கிள் ஏதோ பிரச்சினை பண்ணி சொத்த விற்க முடியாம பண்ணிட்டாரு தாத்தாவும் ஆண்டியும் ஊருக்கு தான் வந்துகிட்டு இருக்காங்க என சொல்கிறார்.

அடுத்து ஈஸ்வரி கிச்சனில் உட்கார்ந்து இந்த குடும்பம் ஒன்னும் இல்லாம போகப்போகுது என அழுது கொண்டிருக்க செழியன் நீங்க என்கூட வந்துருங்க பாட்டி நாம ஜெனி வீட்டுக்கு போயிடலாம் என சொல்கிறார். அப்போது வெளியே இருந்து உள்ளே வரும் எழில் யாரும் எங்கேயும் போக வேண்டாம் எல்லோரும் இந்த வீட்டுல தான் இருக்க போறோம். கண்டிப்பா நான் ஏதாவது பண்ணுவேன் பாட்டி என சொல்ல மீண்டும் ஈஸ்வரி எழிலை திட்டுகிறார்.

அடுத்ததாக பாக்கியா மற்றும் ராமமூர்த்தி வீட்டுக்கு வர ஈஸ்வரி கரெக்டா கடங்கார மாதிரி வந்து நிப்பான் வீட்டை காலி பண்ண சொல்லு கேட்பான் எல்லாரும் எங்க போறது? நான் தாத்தாவோட ஊருக்கு போறேன் இங்க யாருமே இல்லன்னு நெனச்சி அங்கேயே கிடந்து சாகிறேன் என சொல்ல பாக்கியா வீடு தானே அத்தை போனா போகட்டும் நாம ஒரு வாடகை வீடு எடுத்து ஒன்னா இருக்கலாம் என சொல்ல பிறந்ததிலிருந்து நான் வாடகை வீட்டில் இருந்ததே கிடையாது நான் வாடகை வீட்டுக்கு வரமாட்டேன் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

அடுத்து செழியன் நானும் வாடகை வீட்டுக்கு வரமாட்டேன் ஜெனியை கூட்டிகிட்டு நான் போயிடுவேன் என சொல்ல ஜெனி நான் உன் கூட வரமாட்டேன் ஆன்ட்டி கூட தான் இருப்பேன் என சொல்ல நான் சொல்றத மட்டும் நீ செய் என செழியன் சொல்லி எழுந்து செல்கிறான். அடுத்து எல்லாத்துக்கும் காரணம் உன் பையன் தான் அவன சும்மா விடமாட்டேன் என ஆவேசமாக ராதிகா வீட்டுக்கு வருகிறார் ராமமூர்த்தி.

அங்கு மயூ மற்றும் இனியா இருவரும் இருக்க மயூவை உள்ளே அனுப்பி வைத்துவிட்டு ராமமூர்த்தி இப்போ உனக்கு சந்தோஷமா? என கோபப்பட இந்த சொத்துல எனக்கும் பங்கு இருக்கு, அந்த சொத்தை நான் யாருக்கும் விற்க விட மாட்டேன் என சொல்கிறார். என் சொத்துல ஒரு கைப்பிடி மண்ணு கூட உனக்கு கிடைக்காது என ராமமூர்த்தி சொல்கிறார். உனக்கு அந்த வீட்டுக்கு தேவையான பணம்தான் தேவை அதை ரெடி பண்ண தான் போனேன், இப்போ அதுக்கும் வழி இல்லாம பண்ணிட்ட, இப்போ அந்த வீட்டை காலி பண்ண சொல்லி வந்து நிற்பாய் என சொல்ல கண்டிப்பா வந்து நிற்பேன் இந்த குடும்பம் சின்னா பின்னமா போச்சு என ராமமூர்த்தி கோபப்பட்டு பேசுகிறார். மேலும் நான் வயிறு எரிஞ்சு சொல்றேன் நீ நல்லாவே இருக்க மாட்ட, நாசமா போயிடுவே என சாபம் விட கோபி சவால் விட்டவன் பணத்தை ரெடி பண்ணட்டும் நீங்க அமைதியா இருங்க என அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.