கோபியின் அப்பா போட்டோவை காட்ட உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார் மயூ.

Baakiyalakshmi Episode Update 27.01.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்கியா வீட்டிற்கு வந்துள்ள மயூ வீட்டில் உள்ள அனைவரிடமும் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார். கோபி எங்களுக்கும் என் அம்மாவுக்கும் கல்யாணம் என மயூரா சொன்னதால் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார் கோபியின் அப்பா. இதனால் அவர் இதுதான் சந்தர்ப்பம் என கோபி மற்றும் பாக்கியா ஒன்றாக இருக்கும் போட்டோவை எடுத்து சென்று அவரிடம் காட்டுகிறார்.

போட்டோவை காட்டிய கோபியின் அப்பா, உண்மைகளை போட்டுடைத்த மயூ.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட் - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

போட்டோவை காட்டி அவனை உனக்கு தெரியுமா என கேட்க நல்லா தெரியுமே இவர் தான் கோபி அங்கிள், எங்க அம்மாவை கல்யாணம் பண்ணிக்க போறாங்க என கூறுகிறார். பிறகு பார்த்தால் கோபியின் அப்பா இவ்வாறாக யோசித்துக் கொண்டிருக்கிறார். அதன்பிறகு அவர் மீண்டும் மயூ சென்று போட்டோவை காட்ட அவரும் கோபியின் அப்பா நினைத்ததுபோலவே பதில் சொல்கிறார். இதனைக் கேட்ட ஈஸ்வரி நெஞ்சுவலியால் அப்படியே அமர்ந்து இருக்கிறார். இதனால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் பதறி போகின்றனர். ஒருவேளை இப்படி நடந்தால் என்ன செய்வது என நினைத்து பார்த்து அப்படியே அமர்ந்து விடுகிறார் கோபியின் அப்பா.

பிறகு மய்யூ அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பி விடுகிறார். கோபியின் அப்பா அப்படியே அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருக்க ஈஸ்வரி போட்டோவ எதுக்கு வச்சுக்கிட்டு உக்காந்திருக்கீங்க மாட்ட வேண்டியதுதானே என கூறுகிறார். பிறகு போட்டோவை மாட்டி விட்டு அவர் அப்படியே அமர்ந்து யோசனையில் இருக்க என்ன ஆச்சு உடம்புக்கு எதுவும் முடியலையா என பதட்டத்தோடு கேட்கிறார் ஈஸ்வரி. அதெல்லாம் ஒன்னும் இல்ல ராத்திரி சரியா தூங்கலை அதனால ஒரு மாதிரி இருக்கே என கூறுகிறார். பாக்கியாவும் என்ன ஏது என கேட்க நான் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வரேன் என சொல்கிறார்.

இந்தப் பக்கம் கோபி ராதிகாவுடன் வெளியே சென்று ஒரு சைனீஸ் ரெஸ்டாரண்டில் நூடுல்ஸ் சாப்பிடுகிறார். பாக்கியாவை ஒரு முறை சைனீஸ் ரெஸ்டாரன்ட் கூட்டிச் சென்றபோது அவர் சாப்பிட தெரியாமல் தடுமாறியதை நினைத்து பார்க்கிறார். ராதிகாவிடம் ஜொள்ளு விட்டு பேசுகிறார்.

போட்டோவை காட்டிய கோபியின் அப்பா, உண்மைகளை போட்டுடைத்த மயூ.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட் - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் ஈஸ்வரியும் பாக்கியாவும் கோபியின் அப்பா பக்கத்தில் அமர்ந்து சாப்பிட கூப்பிட்டு கொண்டிருக்கின்றனர். தலைவலியா இருக்கு கொஞ்சம் படபடன்னு இருக்கு கொஞ்ச நேரம் போகட்டும் என சொல்லிக்கொண்டே இருக்கிறார். சரி பிபி செக் பண்ணிப் பார்க்கலாம் என பாக்கியா செக் செய்த போது 160 வருகிறது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் பயப்படுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

இதனைத் தொடர்ந்து வெளியான ப்ரோமோ கோபியிடம் சென்று இனிமேலும் உன்ன பத்தி வீட்டில் சொல்லாமல் இருக்க மாட்டேன். உன் பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிட்டு இந்த வயசுல உனக்கு கல்யாணம் கேக்குதா என கோபப்படுகிறார். போய் சொல்லுங்க அப்படியாச்சும் நிம்மதியா இந்த வீட்ல இருந்து போகிறேன் என கூறுகிறார்.