ராதிகாவுக்கு ஆப்பு மேல் ஆப்பு வைத்துள்ளார் தாத்தா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடு காலையில் எழுந்ததும் தாத்தா இனியா மற்றும் மயூரா என மூவரும் உட்கார்ந்து இருக்கும்போது கோபி வந்து ஷோபாவில் உட்கார அப்போது தாத்தா காபி இன்னும் வரல என சத்தம் போட ராதிகா இதோ கொண்டு வரேன் என பதில் அளிக்கிறார்.

ராதிகாவுக்கு ஆப்பு மேல் ஆப்பு வைக்கும் தாத்தா.. அமிர்தாவுக்காக எழில் எடுத்த முடிவு - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

அடுத்து காபி கொண்டு வந்து கொடுத்ததும் அதை குடித்துவிட்டு இது காபியா இல்ல கசாயமா இப்படி கசக்குது என நக்கல் அடிக்கிறார். கோபி நல்லா தானே இருக்கு என சொல்ல என் காஃபி கசக்குது என கூறுகிறார். அப்புறம் பிரேக் பாஸ்ட் என்ன என கேட்க ராதிகா பிரட் என சொல்ல கோபி ஏதாச்சு சாண்ட்விச் பண்ணி கொடுப்பா சாப்பிடுங்க என கூறுகிறார். ஐயையோ எனக்கு அதெல்லாம் வேண்டாம் என சொல்ல ராதிகா எண்ட வேண்டும் என கேட்க பொங்கல், சாம்பார், சடீனி கூட வடை இருந்தா பெட்டரா இருக்கும் என கூறுகிறார். ராதிகா சரி செஞ்சு தரேன் என சொல்ல லன்ச் என்ன என கேட்கிறார்.

ராதிகா தேங்கா பால் சாதம் முட்டை என சொல்ல அதெல்லாம் நீ செஞ்சு முடிக்க ரெண்டு மூணு நாள் ஆகும் வத்த குழம்பு வச்சிட்டு அப்பளம் பொரிச்சுட்டு ஆனியன் போட்டு ஆம்லெட் போட்டு என கூறுகிறார். அதிர்ச்சி அடையும் ராதிகா நா ஆபீஸ் போக வேணாவா என கேட்க போ யார் வேணான்னு சொன்னாங்க இதெல்லாம் செஞ்சிட்டு போ என கூறுகிறார். கோபி என்னப்பா இவ்வளவு பெரிய லிஸ்ட் தருகிறீர்கள் என கேட்க பாக்கியா சமைச்சு கொடுத்தாலே என கூறுகிறார்.

அடுத்து ராதிகா கோவமாக உள்ளே செல்ல கோபி பின்னாடியே எழுந்து சென்று சமாதானம் செய்ய முயற்சி செய்ய அவங்க வீட்ல இருந்தாங்க செஞ்சாங்க என சொல்ல அப்போது அங்கு வரும் இனியா எங்க அம்மாவும் வேலைக்கு போனாங்க என சொல்லி எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றி விடுகிறார். இதனால் கோபி உனக்கு எந்த உதவி வேணும்னாலும் நான் பண்றேன் வெங்காயம் கட் பண்ணவா என கேட்டு சமாளிக்க முயற்சி செய்கிறார்.

அடுத்து எழில் ஆபீஸில் நண்பன் சதீஷிடம் நடந்த விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்க அவன் அமிர்தாவுக்கு போன் போடு கண்டிப்பா எடுப்பாங்க என சொல்ல எழிலும் போன் செய்கிறார். அப்போது அங்கு வரும் வர்ஷினி போனை வாங்கி அமிர்தா போன் எடுக்க மாட்டாங்க எனக்கு என்ன உங்களுக்கும் எனக்கும் தான் கல்யாணம் நடக்கும்னு தோணுது நீங்க வேணா பாருங்க என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். நீங்க அமிர்தா வீட்டுக்கு போனீங்களா என எழில் கேட்க நான் எதுக்கு அங்க போறேன் அவங்க எல்லாம் ஒரு ஆளே கிடையாது என கூறுகிறார். அடுத்து எழில் சதீஷை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே கிளம்புகிறார்.

ராதிகாவுக்கு ஆப்பு மேல் ஆப்பு வைக்கும் தாத்தா.. அமிர்தாவுக்காக எழில் எடுத்த முடிவு - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

இந்த பக்கம் வீட்டுக்கு வரும் செழியன் மற்றும் ஈஸ்வரியிடம் செல்வி சொன்னதைக் கேட்டு ஜெனி கோவிலுக்கா போயிட்டு வந்தீங்க நெத்தியில விபூதியே இல்ல என கேட்க இருவரும் திருத்திருவென முடிக்கின்றனர். அடுத்து எந்த கோவிலுக்கு போயிட்டு எனக்கே இருவரும் ஆளுக்கு ஒரு கோவிலை சொல்லி மாட்டிக் கொள்கின்றனர். பிறகு இரண்டு பேரும் வேலை இருக்கு என சொல்லி அங்கிருந்து எழுந்து நழுவி செல்கின்றனர்.

இதனால் பாக்கியாவுக்கும் சந்தேகம் வர ஜெனி நாப்பது செழியனிடம் கேட்டுவிட்டு வருகிறேன் என எழுந்து செல்கிறார். இந்த பக்கம் எழில் அமிர்தாவை பார்த்தே ஆகவேண்டும் என தன்னுடைய நண்பனை அழைத்துக் கொண்டு தஞ்சாவூர் கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.