கோபிக்கு எழில் ட்ரஸ் வாங்கிக்கொடுக்க அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷனை பார்க்கலாம் வாங்க.

Baakiyalakshmi Episode Update 26.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. எழில் அனைவருக்கும் தீபாவளி டிரஸ் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். இந்த நேரத்தில் கோபி மேலே இருந்து கீழே வர ஈஸ்வரி பாட்டி அவரிடம் எழில் வாங்கிக் கொடுத்த புடவையை காட்டி எப்படி இருக்கு என கேட்டார். கோபி வெரிகுட் என கூறினார். பிறகு எழில் உங்களுக்கும் வாங்கி இருக்கேன் என டிரஸ் எடுத்துக் கொடுக்கிறார்.

பேட்மிண்டன் கெத்து : ஸ்ரீகாந்த்-சிந்து, தொடர்ந்து செம எனர்ஜி..பலே பாய்ச்சல்..

கோபிக்கு டிரஸ் வாங்கிக் கொடுத்த எழில்.. அவர் கொடுத்த ரியாக்ஷன் - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

மிகவும் சந்தோஷப் பட்ட கோபி எழிலை பாராட்டி வாழ்த்து சொன்னார். நீ நல்லா வளர்ந்துட்ட டா என கூறினார். மேலும் உன்னோட படம் பொங்கலுக்கு வெளியாகிறதுல நாம குடும்பத்தோட முதல் நாள் முதல் காட்சி பார்க்கலாம் என கூறினார். மேலும் தான் அணியும் பிராண்ட் என எல்லாமே கரெக்டாக இருக்கு என கோபி கூறினார்.

பிறகு ஆபீசுக்கு வந்த கோபி சதீஷ்க்கு டிரஸ் எடுத்து கொடுத்தார். தேங்க்ஸ் சொன்ன சதீஷ் அது யாருக்குடா வீட்டுக்கா என கேட்டார். ஆமாம் அமிர்தா வீட்டுக்கு என சொல்ல சதீஷ் நீ திருந்தவே மாட்டாயா என கேட்கிறார். எனக்கு அமிர்தாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அமெரிக்கா அம்மா அப்பா குட்டி பாப்பா என எல்லோருக்கும் டிரஸ் வாங்கி இருக்கேன். அமிர்தாவுக்கு புடவை வாங்கி இருக்கேன் என எழில் சொல்ல சதீஷ் அவங்களுக்கு போய் எப்படி புடவை எடுத்து தருவ? அதெல்லாம் அவங்க தப்பா எடுத்துக்க மாட்டாங்க என எழில் சொல்கிறார். கடவுளே இதுக்கு ஒரு எண்ட் கார்ட் போடு என சதீஷ் கூற அதெல்லாம் நல்லவிதமா தான் போடுவார் என கூறிவிட்டு எழில் அமிர்தா வீட்டுக்கு செல்கிறார்.

பிரபலங்களின் பார்வையில் Maanaadu படம் எப்படி இருக்கு? – வாங்க பார்க்கலாம்

கோபிக்கு டிரஸ் வாங்கிக் கொடுத்த எழில்.. அவர் கொடுத்த ரியாக்ஷன் - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அமிர்தா குழந்தையை வைத்து கொஞ்சி கொண்டு இருக்க எழில் வந்து இருப்பதை பார்த்து உள்ளே வாங்க என அழைக்கிறார். பிறகு வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக வந்து அமர்கின்றனர். எழில் முதலில் அப்பாவுக்கு டிரெஸ் எடுத்துக் கொடுக்கிறார். பிறகு அம்மாவுக்கு கொடுக்கிறார். நாங்க தீபாவளி கொண்டாடி ரொம்ப நாளாச்சு. கணேஷ் போனதுக்கு அப்புறமா அதெல்லாம் கொண்டாடுவது இல்லை என கூறுகிறார். எழில் அவர் இருந்தாலும் இல்லனாலும் நம்ப வாழ்ந்து தானே ஆகணும். நிலா பாப்பா வளர்ந்துட்டே இருக்கும். அவகிட்டயும் கணேஷ் இல்லாத தீபாவளி இல்லன்னு சொல்லுவீங்களா. அவளுக்காக கொண்டாடணும் என கூறுகிறார்.

பிறகு அமிர்தாவுக்கு டிரஸ் வாங்கி இருக்கேன் என கூற அவ கிட்ட குடு என அமிர்தாவின் அம்மா கூறுகிறார். பிறகு பாப்பாவுக்கும் ட்ரஸ் எடுத்து கொடுக்கிறார். நாளைக்கு எல்லோரும் எங்க வீட்டுக்கு வரணும். அம்மா உங்கள கண்டிப்பா வர சொல்லி இருக்காங்க என எழில் சொல்கிறார். பிறகு அனைவரும் சேர்ந்து தீபாவளி கொண்டாடுகின்றனர்.

இந்த பக்கம் கோபி வீட்டில் இனியா எல்லோரையும் பட்டாசு வெடிக்க கூப்பிடுகிறார். பிறகு அனைவரும் தீபாவளி கொண்டாட எழில் வந்து உடன் சேர்ந்து கொள்கிறார்.

ராதிகா வீட்டில் மய்யு தெருவையே திரும்பத் திரும்ப பார்த்து கொண்டிருக்க ராதிகா எதற்கு வெளியவே பார்த்துட்டு இருக்க என கேட்கிறார். எல்லோரும் பட்டாசு வெடிக்கிறார்கள் நாமளும் வெடிக்கணும் என கூறுகிறார். ராதிகா சரி வா பூ மத்தாப்பு கொளுத்தலாம் என கூறுகிறார்.

எனக்கு சத்தம் வர பட்டாசு வெடிக்கணும். கோபி அங்கிள் பட்டாசு வாங்கிட்டு வரேன்னு சொன்னார். அவர் வரும்போது வரட்டும் நாம போயிட்டு மத்தாப்பு கொளுத்தலாம் என ராதிகா சொல்ல இல்ல கோபி அங்கிள் வந்து விடட்டும் என கூறுகிறார் மய்யூ. இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.