குடிபோதையில் கோபி ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்ய நேரில் பார்த்து பாக்யா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி போதையில் வீட்டுக்கு வர ராதிகா கோபியை நிறுத்தி குடிச்சிட்டு வந்து இருக்கீங்களா என கேட்க ஆமாம் லைட்டா குடிச்சிருக்கேன். ஃபுல்லா குடிச்சிட்டு இருந்தனால ஒரேடியா விட முடியல அதனால கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிக்கிறேன் என சொல்கிறார்.

மேலும் குடிச்சா தான் உன் பக்கம் இருக்க நியாயம் தெளிவா எனக்கு தெரியுது, நீயும் மயூவும் பாவம். நம்ப மூணு பேரும் சந்தோஷமா இதே வீட்ல இருக்கலாம் யாரைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை என கூறுகிறார். பிறகு ராதிகாவை கட்டிப்பிடித்து முத்தமிட அப்போது பாக்கியா வந்து ரூம் கதவை திறந்து அதிர்ச்சி அடைகிறார்.

எதுவும் பேசாமல் கதவை மூடி கீழே செல்லும் பாக்யா இனியாவின் ரூமில் அவங்க ரெண்டு பேரும் இருக்காங்க என சொல்ல எல்லோரும் இருவரையும் திட்டுகின்றனர். பிறகு எழில் நீங்க என் ரூமில் படுத்துக்கோங்க என சொல்ல ஜெனியும் என் ரூமில் படுத்துக்கோங்க என சொல்ல பாக்கியா நீங்க உங்க ரூம்ல படுத்து தூங்குங்க, நான் ஹால்லயே படுத்துக்கிறேன் என சொல்கிறார்.

நீ எதுக்குமா உன்னோட ரூமை விட்டுக் கொடுக்கணும் என எழில் கேட்க வாழ்க்கையே விட்டுக் கொடுத்தாச்சு ரூம்ல என்ன இருக்கு என சொல்லி உள்ளே சென்று விடுகிறார். பிறகு ஜெனி இனியாவை தன்னுடைய ரூமுக்கு அழைத்துச் சென்று படுக்க வைக்கிறார்.

அடுத்து கோபி ரூமில் இருந்து வெளியே வந்து போனில் பேசிக் கொண்டிருக்கிற எழில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட அங்கு வரும் பாக்கியா தடுத்து நிறுத்தி புரியாம தப்பு பண்றவங்க கிட்ட பேசலாம் எல்லாம் தெரிஞ்சு இப்படி பண்றவங்க கிட்ட பேசி என்ன ஆகப்போகுது என கோபியை அவமானப்படுத்தி எழிலை உள்ளே அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.