ராதிகா கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளால் மிரண்டு போயுள்ளார் கோபி.

Baakiyalakshmi Episode Update 25.05.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் எழில் தன்னுடைய அம்மாவிடம் அப்பா விட்டு வந்தது நெஞ்சு வலியே இல்லை என சொல்ல பாக்யா அதிர்ச்சி அடைகிறார். கேஸ் தான் நெஞ்சு வலித்தது தானே என கூறுகிறார். நீ அப்பாவை ரொம்ப நம்பாத அவர் அந்த அளவுக்கு ஒர்த் இல்லை என கூறுகிறார். தயவு செய்து நீ எழுந்து போ என பாக்கியா சொல்ல அங்கிருந்து எழில் எழுந்து சென்று விடுகிறார்.

ராதிகா கேட்ட அடுக்கடுக்கான கேள்வி, சிக்கி தவிக்கும் கோபி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் கோபி ராதிகா வீட்டிற்கு வர ராதிகா வந்தது அவர் கோபமாக பேசுவதை பார்த்து கோபி அவரை சமாதானம் செய்ய நான் எப்போ போன் பண்ணேன் நீங்க எப்ப வரீங்க என கேட்கிறார். அதுவாடா செல்லம் நிறைய மீட்டிங் இருந்துச்சு அதனால உடனே வர முடியல என கூறுகிறார். நீங்க என்கிட்ட உண்மையாத்தான் இருக்கீங்களா நீங்க உங்க குடும்பத்த பத்தி என்கிட்ட சொன்னது எல்லாம் உண்மையா என கேட்கிறார்.

கோபி ஆமாம் உண்மைதான் இதுல என்ன உனக்கு சந்தேகம் என சொல்ல ராதிகா என் கண்ணை பார்த்து சொல்லுங்கள் என கூறுகிறார். ஆனால் கோபி கண்ணை பார்த்து பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். எனக்கு உங்க குடும்பத்தை பார்க்கணும் என சொல்ல எதுக்கு அவங்கள பார்க்கணும் என கோபி கேட்கிறார். உங்களுக்கு என்னுடைய அம்மா என்னுடைய கணவர் ராஜேஷ் என எல்லோரையும் தெரியும் ஆனா உங்க பக்கது அப்படி இல்ல உங்கள தவிர உங்க வீட்ல இருக்க யாரையும் எனக்கு தெரியாது.

அவர்கள் எல்லோரையும் நான் பார்க்க வேண்டும் என சொல்ல அவங்கள பார்த்து நீ என்ன பண்ண போற? எனக் கேட்க எனக்கு உங்க குடும்பத்த பாக்கணும் இல்லன்னா பேமிலி போட்டோ காட்டுங்க உங்க போன்ல இல்லையா என கேட்கிறார். அவங்க எனக்கு ஃபேமிலி இல்ல நீயும் மயூராவும் தான் என்னுடைய ஃபேமிலி என சொல்ல ராதிகா கோபப்படுகிறார். சரி கூட்டிட்டு போறேன் என்று சொல்லிவிட்டு கோபி அங்கிருந்து கிளம்புகிறார்.

ராதிகா கேட்ட அடுக்கடுக்கான கேள்வி, சிக்கி தவிக்கும் கோபி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் எழில் அமிர்தாவுடன் பேச அதன்பிறகு பாக்கியா அமிர்தாவை கல்யாணம் செய்தால் என்னவெல்லாம் பிரச்சனைகள் வரும் அதை எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டும் என ஐடியா கொடுக்கிறார்.

இந்தப் பக்கம் கோபி தன்னுடைய நண்பர் சதீஷை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்ல அவர் ராதிகாவிடம் எல்லா உண்மையையும் சொல்லி எஸ்கேப் ஆகி விடு. பாக்கியா ரொம்ப நல்ல பொண்ணு என கூறுகிறார். ராதிகா இல்லாம என்னால வாழ முடியாது என கோபி கூறுகிறார். நான் ஒரு ஐடியா சொல்லவா வேற யாராவது ஒரு பேமிலி போட்டோல உன்னோட முகத்தை மாத்தி காமிச்சுட்டு என சொல்ல சூப்பர் ஐடியா என்று கூறுகிறார் கோபி. நீ எவ்வளவு டென்ஷனாக இருந்தால் இதையே சூப்பர் ஐடியானு சொல்லுவ என்று கிண்டலடிக்கிறார் சதீஷ். நீ என்னதான் பொய் சொல்லி தப்பித்துக் கொண்டே வந்தாலும் ஒரு நாள் உண்மை தெரிய தான் போகுது என கூறுகிறார். ராதிகா கிட்ட தங்கள் போட்டோவைக் காட்டினா தானே நான் காட்டவே மாட்டேன் என முடிவு செய்கிறார் கோபி. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

ராதிகா கேட்ட அடுக்கடுக்கான கேள்வி, சிக்கி தவிக்கும் கோபி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதன் பின்னர் வெளியான ப்ரோமோ வீடியோவில் உனக்காக என்னுடைய குடுங்கள் எல்லாத்தையும் விட்டுட்டு வரேன் அப்படி இருக்கும்போது நீ என்ன நம்பலையா என கோபி கேட்க உங்க பேமிலியை காட்ட முடியுமா முடியாதா என ராதிகா கேட்கிறார். முடியாது என கோபி சொல்ல அப்போ வெளியே போங்க என கூறுகிறார்.