வீட்டை விட்டு ஓடி விடலாம் என தோன்றுவதாக நண்பனிடம் புலம்பியுள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செழியன் மொட்டை மாடியில் நின்று கண் கலங்கிக் கொண்டிருக்க அங்கு வரும் எழில் எதுக்கு இப்போ அழுதுட்டு இருக்க என கேட்க அப்பா ஏன் இப்படி பண்றாரு என செழியன் வருத்தப்படுகிறார். இதனால் எழில் எல்லாம் உன்னால வந்த பிரச்சனை அவர கூட்டிட்டு போய் அந்த வீட்ல விட்டு இருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது என திட்டி தீர்க்கிறார்.

அதன் பிறகு கோபி நண்பன் வசந்த் உடன் உட்கார்ந்து சரக்கு அடித்துக் கொண்டு இருக்கிறார். ராதிகா தெரிஞ்சுதான் பண்றாளா இல்ல தெரியாம பண்றாளான்னு எனக்கு புரியல. அம்மா ராதிகாவை விட்டுட்டு நீ இந்த வீட்டிலேயே இருந்துடுனு சொல்றாங்க, பாக்யா அப்பவும் என்ன பண்றான்னு புரியல இப்பவும் என்ன பண்றான்னு புரியல. என் பசங்க என்ன பாக்குற ஒரு அருவருப்பான பார்வையால் எனக்கு அவமானமா இருக்கு என புலம்புகிறார்.

மேலும் எல்லாத்தையும் விட்டுட்டு எங்கேயாவது ஓடிப் போயிடலாம் போல தோணுது என சொல்ல அவருடைய நண்பர் இதை எல்லாம் அவர்களே செஞ்சிடுவாங்க ஒரு நாள் அவங்க எல்லாரும் ஒன்றாகிடுவாங்க நீ நடு ரோட்டுக்கு வந்து நிற்ப என சொல்கிறார். ‌‌ ‌‌

அதற்கு அடுத்ததாக எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பாக்யா இனியாவிடம் நீ நல்லா படிச்சு நல்ல காலேஜ் போகணும் வீட்டில் நடக்கும் பிரச்சினை பற்றி யோசிக்காத என சொல்லிக் கொண்டிருக்க காலிங் பெல் அடிக்கிறது. ஈஸ்வரி கோபியா இருக்கும் என சொல்ல கதவு திறந்து தான் இருக்கு, எதுக்கு பெல் அடிக்க போறாரு? என வீட்டிலுள்ளவர்கள் கூறுகின்றனர். ‌‌

அடுத்து பாக்கியா வெளியே போய் பார்க்க புட் டெலிவரிக்காக டெலிவரி பாய் நிற்கிறார். ராதிகா என்ற பெயரில் ஆர்டர் செய்திருப்பதாக சொல்ல அந்த நேரத்தில் கீழே இறங்கி வரும் ராதிகா நான் தான் ஆர்டர் செய்திருந்தேன் என சொல்லி அதை வாங்கிக்கொள்ள ஃபுட் டெலிவரி மேன் நீங்க அந்த வீட்ல தானே இருந்தீங்க என கேட்க அது வாடகை வீடு, இது சொந்த வீடு என பதில் கொடுக்கிறார். இதனால் ஈஸ்வரி உச்சகட்ட அதிர்ச்சி ஆகிறார்.

அதன் பிறகு பாக்கியா வெளியே வர கோபி குடிபோதையில் எதிரில் வந்து நிற்கிறார். பிறகு ஈஸ்வரி இவங்க எந்த ரூம்ல இருக்காங்க என வீட்டில் உள்ளவர்களிடம் கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.