ராதிகாவிடம் உண்மையை மறைத்து விட்டு அப்பாவை சந்திக்க வருகிறார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபியின் அப்பா கோபியை பார்க்க கிளம்ப ஈஸ்வரி நானும் கூட வரேன் என சொல்ல வீட்ல யாரும் இல்லை இனியா தனியா இருக்கா நீ என்கூட வந்துட்டா அவளை யாரு பார்த்துக்கிறது. நான் மட்டும் போய் பார்த்துட்டு வரேன் இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன் என வாக்கு கொடுத்துவிட்டு செல்கிறார்.

உண்மையை மறைக்கும் கோபி.. ராதிகா செய்த வேலை, காத்திருந்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இவர்கள் இருவரும் கல்யாணம் பற்றி பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் எழில் வந்து என்ன விஷயம் என கேட்க இருவரும் விஷயத்தை சொல்லாமல் மறைத்து விடுகின்றனர். அடுத்ததாக கோவிலுக்கு போன ராமமூர்த்தி கோபிக்கு போன் போட என் மூடை ஸ்பாயில் பண்ணாதீங்க எனக்கு எதுக்கு போன் பண்ணீங்க என டென்ஷன் ஆகிறார். உன்னை நேரில் பார்த்து பேசணும் என சொல்ல அதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை நீங்க என்ன பேச போறீங்கன்னு எனக்கு தெரியும் ஆனா அது எதுவும் நான் கேட்க போவதில்லை என கூறுகிறார்.

பிறகு ராதிகா என்ன பிரச்சனை ஏன் இப்படி டென்ஷனா இருக்கீங்க என கேட்க ஆபீஸ் பிரச்சனை என்ன சொல்லி சமாளிக்க போயிட்டு அதை சரி பண்ணிட்டு வாங்க, ரிசப்ஷன்ல இப்படியா மூஞ்ச வச்சிட்டு நிப்பீங்க என சொல்ல நீ சொல்றதும் சரிதான் என கோபி அப்பாவை சந்திக்க கிளம்புகிறார்.

கோவிலுக்கு வந்த கோபியிடம் இந்த கல்யாணம் வேண்டாம் நீ தப்பு மேல தப்பு பண்ற என ராமமூர்த்தி எடுத்து சொல்ல அதை எல்லாம் கேட்காத கோபி இனிமேலும் எனக்கும் பாக்யாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யார் என்ன சொன்னாலும் எனக்கும் ராதிகாவுக்கும் கல்யாணம் நடக்கத்தான் போகுது என்னுடைய முடிவிலிருந்து நான் கொஞ்சம் கூட பின்வாங்க போவதில்லை என கூறுகிறார்.

உண்மையை மறைக்கும் கோபி.. ராதிகா செய்த வேலை, காத்திருந்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

ஒரு நாள் என்னையும் என்னுடைய நிலைமையையும் புரிந்து கொண்டு அம்மா, இனியா என எல்லோரும் என்னோட வருவாங்க அதை நீங்க பார்க்கத்தான் போறீங்க என சொல்ல நீ பகல் கனவு காண்கிற அது ஒரு நாளும் நடக்காது என ராமமூர்த்தி திட்ட கோபி அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.