கோபிக்கு ராதிகா கொடுத்த அதிர்ச்சி ஒரு பக்கம் இருக்க எழில் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியடைந்துள்ளார் பாக்கியா.

Baakiyalakshmi Episode Update 24.05.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடு பாக்கியா தனியாக உட்கார்ந்து கோபி மூர்த்தியிடம் கோபமாக பேசியது பற்றியும் தனம் உங்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் நாங்க வந்து நிற்போம் என கூறியது பற்றியும் யோசித்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் செல்வியும் வந்து உட்காருகிறார். ‌

கோபிக்கு ராதிகா கொடுத்த ஷாக்.. கடைசியில் பாக்கியாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு ஈஸ்வரியின் வந்து உட்கார கோபி பண்ணுவது சரி இல்லை இவன் ஏதாவது தப்பு பண்ணி இருப்பான் அதைத்தான் மூர்த்தி எடுத்துச் சொல்லி இருப்பான் என கூறுகிறார். கோபி கொஞ்ச நாளாகவே சரியில்லை என ஈஸ்வரி கூறுகிறார். பிறகு கோபிக்கு இருந்து ஆபீஸ் விட்டு கிளம்புவதாக சொல்ல அவரை கூப்பிட்டு உட்கார வைத்து மூர்த்திக்கும் உனக்கு என்ன பிரச்சனை நீ எதுக்கு அவன்கிட்ட அப்படி சத்தம் போட்ட என கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லை முடிந்து போன விஷயம் இன்னும் எதற்கு விடுங்க என கூறுகிறார். என்ன பிரச்சனை மூர்த்தி என்ன சொன்னார் நீ எதுக்கு சத்தம் போட்டான் நாங்க தெரிஞ்சுக்கணும்ல சொல்லு என கேட்கிறார்.

கோபி அவர் வந்ததுல இருந்து அட்வைஸ் மேல அட்வைஸ் பண்ணிட்டு இருந்தாரு. நான் இனியாவுக்கு கூட இப்படியெல்லாம் அட்வைஸ் பண்ணுவது கிடையாது. கடுப்பாகி தான் அப்படி திட்டிட்டேன் தப்பு என் மேலதான் என கூறுகிறார். பிறகு ஈஸ்வரி திரும்பத் திரும்ப இதைப் பற்றி கேட்க கோபி எதையோ சொல்லி மழுப்பி விட்டு வேலைக்கு கிளம்பி விடுகிறார்.

காரில் சென்று கொண்டிருக்கும் போது அவருடைய நண்பர் சதீஷ் போன் செய்து வீட்டில் மாட்டிக்கிட்டியா? ராதிகா பிறந்தநாள் பங்ஷனுக்கு வந்தாங்களா என கேட்கிறார். கோபி அதெல்லாம் மாட்டுல எஸ்கேப் ஆகிட்டேன். ஆனா என் வீட்டுக்கு வந்திருந்த ரிலேட்டிவ் தான் எனக்கும் ராதிகாவுக்கும் ரிலேஷன்ஷிப் இருக்குனு கண்டுபிடிச்சுட்டாங்க. உடனே ஒரு டிராமா போட்டு அவங்களை பேக் பண்ணி அனுப்பி விட்டேன் என சொல்ல இன்னைக்கு நீ எஸ்கேப் ஆகிட்ட, ஆனா இப்படியே நடக்காது என அவருடைய நண்பர் சொல்ல கரெக்டாக ராதிகா போன் அடிக்கிறார்.

கோபிக்கு ராதிகா கொடுத்த ஷாக்.. கடைசியில் பாக்கியாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

உடனே கோபி நண்பனின் போனை கட் செய்துவிட்டு ராதிகாவிற்கு போன் போட்டு என்ன ஏது என கேட்க உடனே வீட்டுக்கு வாங்க என கூறுகிறார். உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும் என சொல்லி விட்டு போனை கட் செய்து விடுகிறார். திரும்பவும் கோபி போனைப் போட்டு ராதிகாவிடம் பேச அவர் மீண்டும் அதையே சொல்லி விட்டு போனை வைக்கிறார். இதனால் குன்னக்குடி காரங்க எதையோ பத்த வச்சிருக்காங்க. இவளை வேற சமாளிக்கணுமா என குழம்புகிறார் கோபி.

இந்த பக்கம் பாக்கியா வீட்டிற்கு வர செல்வி டீ போட்டு கொடுக்க சொல்கிறார். அந்த நேரத்தில் எழிலும் வந்துவிட இருவருக்கும் டீ போட்டுக் கொடுத்து விட்டு உட்காருகிறார். செல்வி உங்க பாட்டி உங்க அப்பா அம்மா நல்லா திட்டி விட்டாங்க என சொல்ல நீ வீட்டுக்கு கிளம்பு என அனுப்பி வைத்து விடுகிறார் பாக்கியா. இவ வெட்ட அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் இருக்குன்னு சொல்லு வா என சொல்ல இருக்காதுன்னு நீ நம்பறியா என எழில் கேட்கிறார். என்னடா நீயும் அவளும் மாதிரி பேசுற அப்பா என்ன அப்படி பட்டவரா அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

அவர் கொஞ்ச நாளா சரி இல்ல தான், அத்தை கூட அவருடைய நடவடிக்கை சரியில்லை தான் சொல்றாங்க ஆனா அவர் இப்படி எல்லாம் இருக்க மாட்டாரு. ஒருவேளை அப்படி இருந்தால் அது எல்லாம் என்னால் தாங்க முடியாது எனக்கு நெஞ்சு வலியே வந்துவிடும் என கூறுகிறார். அவர் அப்படி இருந்தா தூக்கி போட்டு போம்மா என சொல்ல எங்க போக சொல்ற நீ எதுக்கும்மா போகணும் அவர போக சொல்லு நாம எல்லோரும் சந்தோஷமா இந்த வீட்டில் இருக்கலாம் என சொல்கிறார். இந்த வீட்டுல நீயும் நானும் மட்டும்தான் இருக்கோமா எவ்வளவு பேர் இருக்காங்க என பாக்கியா கூறுகிறார்.

நீ இப்படி பேசுறத பாத்தா உங்க அப்பாவுக்கு அன்னைக்கு வந்த நெஞ்சுவலி இன்னைக்கு எனக்கு வந்திரும்போல இருக்கு என சொல்ல அன்னைக்கு அப்பாவுக்கு நெஞ்சு வலியே வரல என எழில் சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.